ads
உலக புகையிலை ஏதிர்ப்பு நாள்
ராம் குமார் (Author) Published Date : May 31, 2019 23:31 ISTworld news
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31 ஆம் தேதி உலக புகையிலை ஏதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. புகையிலையின் தீமைகளை எடுத்து கூறி மக்களை நல்வழிபடுத்துவதே இந்நாளை கடைபிடிப்பதின் நோக்கம் ஆகும். இம்முறை "புகையிலை மற்றும் நுரையீரல் ஆரோக்கியம்" என்ற தலைப்பை கொண்டுள்ளது. புகை பிடிப்பதினால் தீவிர உடல் நோய்கள், சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுகின்றன. சிகரெட் புகை சுவாசிப்பதனால் புகை பிடிக்காதவர்களுக்கு உடல் தீங்கு ஏற்படுகின்றது. புகையினால் கேன்சர், தன்னுடல் தாங்குதிறன் நோய், வகை 2 நீரழிவு போன்ற சீர்கேடுகளை தருகின்றது. புகையிலையை எடுத்துக்கொண்டால் மரணம் வரை கொண்டு செல்லும். புகைபிடிப்பதால் காற்று மாசு அடைந்து சுவாச சம்மந்தப்பட்ட நோய்களை உண்டாக்குகின்றது.
புகைபிடிப்பதை தடுக்க 5 வழிகள்:
நுரையீரல் நன்றி செலுத்தும்: புகையினால் நுரையீரல் கேன்சர் ஏற்படுகின்றது. சிகரெட்டில் உள்ள தார் நுரையீரலில் உள்ள காற்று பைகளின் மீது அப்பிக்கொள்கின்றது மேலும் நீளும் தன்மையும் மங்கி விடுகின்றது. சில சிகரெட்டுகளை புகைத்தலுக்கு உடலில் ஆக்சிஜனை முழுமையாக பயன்படுத்த முடியாமல் போகின்றது. எனவே புகைக்காமல் இருப்பது நுரையீரலுக்கு மிகவும் சிறந்தது ஆகும்.
திண்மை பலவீனத்தை காக்கலாம்: புகைப்பதால் நமது உடலில் சுறுசுறுப்பற்ற நிலையை உருவாக்கி வேலைகளை செய்ய விடாமல் தடுக்கின்றது. புகைப்பதன் மூலம் உடலில் கார்பன் மோனோக்சைடு சுழல்கின்றது மேலும் உடலில் ஒரு தொய்வு நிலையம் மந்த நிலையும் உருவாக்கின்றது.
பண சேமிப்பு: ஒவ்வொரு நாளும் பத்து சிகரெட்டுகளை விளக்குவதன் மூலம், புகைப்பிடிக்கும் ஒருவர் கிட்டத்தட்ட 3,650 சிகரெட்டுகள் அல்லது பீடிகளை ஆண்டுதோறும் புகைக்கின்றார். புகைப்பிடிப்பவர் குறைந்த விலையில் பிராண்ட் ஒன்றை தேர்ந்தெடுப்பார் என்று கருதினால், ஒரு நபர் வருடத்திற்கு 36 ஆயிரம் ரூபாய் சிகரெட்டுகளை வாங்குவதற்கு மட்டுமே செலவு செய்கின்றார். இந்த பணம் ஒரு விடுமுறைக்கு, சேமிப்பு அல்லது முதலீடு செய்ய பெரிதும் உதவும்.
சுற்றுசூழல் பாதுகாப்பு: புகையிலையை புகைப்பதாலும் பயிரிடுவதாலும் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுகின்றது. பல நச்சு மாசுகள் சிகரெட் புகை மூலம் வெளியேறுகின்றது. தயாரிப்புகள் மூலமும் பல மாசு பொருட்கள் வெளியாகின்றது.
சுற்றத்தாரின் பாதுகாப்பு: உலக சுகாதார அமைப்பின் ஒரு ஆய்வானது, ஒவ்வொரு ஆண்டும், சிகரெட் புகை சுவாசித்தலின் காரணமாக ஒரு மில்லியன் இறப்புக்கள் நடக்கின்றன என்று கூறுகிறது. புகைபிடிப்பதை நிறுத்துவதன் மூலம், நெருங்கிய மற்றும் அன்பானவர்களை புகையை சுவாசிப்பதில் இருந்து விடுவிக்கப்படும். இது அவர்களின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். புகையை சுவாசிப்பதால் குறிப்பாக சிறுவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறி (SIDS), நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, அடிக்கடி மற்றும் கடுமையான ஆஸ்துமா தாக்குதல்கள், நாள்பட்ட இருமல் மற்றும் காது நோய்கள் போன்ற நோய்கள் அதிகரித்துள்ளன. இவற்றை தடுக்க புகை பிடிக்காமல் இருப்பதை கடைபிடிக்க வேண்டும்.
அறிக்கையில், உலகில் 80 லட்சம் பேர் நேரடியாக புகைப்பதால் பாதிப்பு அடைகின்றனர். மேலும் புகையிலையை பயன்பாட்டால் 70 லட்சம் பேர் பாதிப்பு அடைகின்றனர். 10 லட்சம் மக்கள் புகையை சுவாசித்து பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். அளவு சிறியதாக இருந்தாலும் பாதிப்பு பெரியதாக உள்ளது. எனவே புகையிலை மற்றும் புகைப்பதை தவிர்த்து உடல் நலத்தை பேணி காப்போம்.