இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பால் சமூக வலைத்தளங்கள் முடக்கம்
புருசோத்தமன் (Author) Published Date : Apr 21, 2019 15:57 ISTworld news
உலக மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்திய சம்பவம் இன்று இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு. கிறிஸ்துவர்களின் மிக முக்கியமான தேவாலயங்களில் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் இதுவரை சுமார் 185 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கு உலகெங்கிலும் தாக்குதலுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தும், பாதிப்புக்குள்ளான மக்களுக்கு ஆதரவும் தெரிவித்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள் குண்டுவெடிப்புக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் நல்ல முறையில் செய்திகள் பரவினாலும், மக்களை அச்சுறுத்தும் வகையிலும் செய்திகள் பரவுதலால் இலங்கை அரசு பதற்றத்தை குறைப்பதற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அணைத்து சமூக வலைத்தளங்களை முடக்கியுள்ளனர்.