ads
சிங்கப்பூரில் 328 கோவிட் -19 நோயாளிகள் ஒரே நாளில் வீட்டிற்கு சென்றனர்
விக்னேஷ் (Author) Published Date : May 09, 2020 10:43 ISTworld news
சிங்கப்பூர்: மே 8, 2020 வெள்ளிக்கிழமை, ஒரே நாளில் அதிகபட்சமாக 328 கோவிட் -19 நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பினார்கள். இதற்கு முன், கடந்த புதன்கிழமை அன்று சுமார் 115 கோவிட் -19 நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை வரை, 768 புதிய கோவிட் -19 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதுவரை சிங்கப்பூரில் மொத்த கொரோனா வைரஸ் எண்ணிக்கை 21,707 ஆக உள்ளது. இதில் 2,040 மக்கள் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் மற்றும் இதுவரை 20 பேர் கோவிட் -19 நோய்க்கு பலியாகியுள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் இன்றுவரை 1245 நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகினற்னர் மற்றும் 18,000 மேற்பட்டோர் வீட்டு கண்கணிப்பில் உள்ளனர். அமைச்சர் லாரன்ஸ் வோங் வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் கூறியது, மே 12ஆம் 2020 தேதி முதல் தொழில் நிறுவனங்கள் விதிமுறைப்படி தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிப்படியாக மக்களை சகஜ நிலைக்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறோம் மற்றும், மக்கள் எங்கும் கூட்டமாக செல்ல வேண்டாம். குறிப்பாக பெரும்பாலானோர் முடி திருத்தும் செய்யாமல் இருக்கும் இந்த சமயத்தில், சலூன்களுக்கு முந்தி செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
நேரம் வரும்போது செல்லுங்கள் மற்றும் கூட்டம் கூடுவதை தவிர்த்து சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.