ads

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் மரண தண்டனை குறித்து முக்கிய செய்தி

பெர்வேஸ் முஷாரஃப்

பெர்வேஸ் முஷாரஃப்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் மரண தண்டனை குறித்து முக்கிய செய்தி: பாகிஸ்தான் அரசியலில் மறக்க முடியாத நபர் பெர்வேஸ் முஷாரஃப். சுமார் இருபது வருடத்திற்கு முன், 1999 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் நவாஸ் செரிபின் ஆட்சியை இரவோடு இரவாக கலைத்து ராணுவ ஆட்சியை கொண்டுவந்தார் பெர்வேஸ் முஷாரஃப்.

பெர்வேஸ் முஷாரஃப் 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் இராணுவ தளபதியாக இருந்தார், நவாஸ் செரிபின் ஆட்சியில் பல்வேறு குளறுபடிகள் காரணங்களால், தனது ராணுவ படையை கொண்டு அதிபர் ஆனார்.

கடந்த செவ்வாய் கிழமை பாகிஸ்தானின் சிறப்பு நீதி மன்றம் பெர்வேஸ் முஷாரஃப்க்கு தூக்கு தண்டனை வழங்கியது. தற்பொழுது துபாயில் சிகிச்சை பெற்றுவரும் பெர்வேஸ் முஷாரஃப், மருத்துவமனையில் இருந்து ஒரு வீடியோ வெளியீட்டுள்ளார், அதில் தனிப்பட்ட பகைமையின் காரணத்தால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனது வழக்கறிஞர்கள் மூலம் எதிர்த்து வழக்கிடுவேன், எனக்கு நீதி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் மரண தண்டனை குறித்து முக்கிய செய்தி

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் மரண தண்டனை குறித்து முக்கிய செய்தி