ads
கொரோனா: வாஷிங்டன் மக்களுக்கு சிறை நிச்சியம் மேயர் முரியல் பவுசர் ஆவேசம்
புருசோத்தமன் (Author) Published Date : Mar 31, 2020 19:57 ISTworld news
வாஷிங்டன் மேயர் முரியல் பவுசர்: கொரோனா வைரஸின் போது வீட்டை விட்டு வெளியேறினால் சிறை நிச்சியம்: கொரோனா வைரஸ் தாக்குதல் நடக்கும் இந்த நேரத்தில் மக்கள் வீட்டை விட்டு மக்கள் வெளிய வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி வெளியே வந்தால், வாஷிங்டன் டி.சி.யில் வசிப்பவர்களுக்கு 90 நாட்கள் சிறைத்தண்டனையும் 5,000 டாலர் அபராதமும் விதிக்கிறார் வாஷிங்டன் மேயர் முரியல் பவுசர்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு சில மாகாணங்களில் மக்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னரே சுய தனிமையை தொடங்கிவிட்டனர். இருந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா தொற்றும் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், வாஷிங்டன் மற்றும் சில இடங்களில் மக்கள் வெளியே வர தடை செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன் மக்கள் காலையில் மற்றும் மாலையில் நடைபயிற்சி அல்லது ஜாகிங் செய்வதற்கும், மளிகை பொருட்களை வாங்கி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தடையை பொருட்படுத்தாமல் யாரேனும் தேவை இல்லாமல் வெளியே சுற்றினால், சிறை தண்டனை உறுதி என்று வாஷிங்டன் மேயர் முரியல் பவுசர் அறிவித்துள்ளார்.