ads
கோவிட்-19 நோயாளிகள் மெம்பிஸ் மருத்துவமனைகளுக்கு அதிகளவில் வர தொடங்கிவிட்டனர்
புருசோத்தமன் (Author) Published Date : Apr 02, 2020 13:12 ISTworld news
கோவிட் 19 நோயாளிகள் மெம்பிஸ் மருத்துவமனைகளுக்கு வர தொடங்கிவிட்டனர், இவர்களை சமாளிக்க அரசு 1,000 படுக்கை வசதிகளை வேகமாக செய்யும் பணிகளை தொடங்கப்பட்டுவிட்டது.
கொரோனா வைரஸ் நோயாளிகளின் அலை ஏற்கனவே மெம்பிஸ் மருத்துவமனைகளைத் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது. இந்த நோயாளிகளை சமாளிக்க, மாநில அதிகாரிகளும் இராணுவ கார்ப்ஸ் ஆப் இன்ஜினியர்களும் மெம்பிஸில் 1,000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையின் இருப்பிடத்தை வரும் நாட்களில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"நாங்கள் உண்மை செய்தியை வெளியிட தயாராகியுள்ளோம், எங்களுக்கு ஏற்கனவே 70 அல்லது அதற்கு மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகள் உள்ளனர்" என்று மெம்பிஸ் நகரத்திற்கு ஆலோசனை வழங்கும் தொற்று நோய் நிபுணர் டாக்டர் மனோஜ் ஜெயின் புதன்கிழமை கூறியுள்ளார், மேலும் அவர் கூறியது...
"நான் ஒரு தொற்று நோய் மருத்துவர், நான் உள்ளே சென்று நோயாளிகளைப் பார்க்கிறேன். மருத்துவமனைகளில் ஏற்கனவே 70 அல்லது அதற்கு மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகள் உள்ளனர், அவர்கள் ICU களில் படுக்கைகளை அனுமதித்துள்ளனர் மற்றும் 140 க்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த அளவிற்கு நோயாளிகள் வந்துகொண்டிருப்பதும், மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது பொதுமக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு என்று டாக்டர் ஜெயின் கூறினார்.
கோவிட்-19 நோய்யை கட்டுப்படுத்த தேவையான பொருட்கள் மற்றும் படுக்கைகள் பற்றிய ஜெயின் கூறியதாவது, " விரைவில் கட்டப்படவுள்ள மருத்துவமனை போர்க்கால அடிப்படையில் வேகமாக செல்வதாகவும், மற்றும் ஓய்வுபெற்ற செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு மீண்டும் பணிக்குழுவில் சேர்ந்து நோயாளிகளின் கூட்டத்தை சமாளித்து உதவ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது."
மருத்துவமனை படுக்கைகள், வென்டிலேட்டர்கள் பற்றாக்குறை, மெம்பிஸ் பகுதியில் போதுமான மருத்துவமனை படுக்கைகள் இல்லை, போதுமான உபகரணங்கள் இல்லை என்றும் ஜெயின் கூறினார். "எங்களிடம் உள்ள அனைத்து மருத்துவமனைகளின் படுக்கைகள் எண்ணிக்கை எடுத்தால் - சுமார் 3,000 தான் இருக்கும், அதை இரட்டிப்பாக்கும் முயற்சியில் உள்ளதாக ஜெயின் கூறினார்.