ரஷ்யாவில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை 1000 ஐ தாண்டியது
புருசோத்தமன் (Author) Published Date : Mar 29, 2020 11:55 ISTworld news
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை 1000 ஐ தாண்டியது: ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு அதிகம் ஆன காரணத்தால் பொழுதுபோக்கு வளாகங்கள் மற்றும் ஹோட்டல்களை மூடுவது மட்டுமல்லாமல், அனைத்து சர்வதேச விமானங்களும் ரஷ்ய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த தொற்றுநோயால் ரஷ்யாவில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மில்லியன் கணக்கான ரஷ்யர்கள் அரசு நடத்தும் ஹோட்டல்களிலும் பிற பொழுதுபோக்கு வசதிகளிலும் தங்களை சுய பாதுகாப்பில் நோயைக் கட்டுப்படுத்த இருந்தார்கள், இவை அனைத்தும் மார்ச் 28 முதல் ஜூன் 1 வரை மூட அரசாங்கம் அறிவித்துள்ளது.
தலைநகரான மாஸ்கோ, மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதி, இந்த வார இறுதியில் உணவகங்கள் கபே மற்றும் கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளது, மேலும் உணவு மற்றும் மருந்துகளை விற்பவர்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி விளாதிமிர் பூட்டின் அடுத்த வாரம் அலுவலங்கள் செயல்பட வேண்டாம் என அறிவித்துள்ளார். மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது ரஷ்யாவில் கொரோனா: கோவிட்-19 எண்ணிக்கை குறைவாக உள்ளது, ஆனால் அதிகார பூர்வ எண்ணிக்கையின் அறிவிப்பு இல்லை, மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஜனாதிபதி விளாதிமிர் பூட்டின் இந்த இரண்டு மாதம் முழு அடைப்பு, கண்டிப்பாக கோவிட்-19 நோயின் தாக்கத்தை குறைக்கும் மற்றும் மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியம்.
ரஷ்யாவும் வட கொரியாவும் பாதிக்கப்படவில்லை என்று சமூக ஊடகங்கள் செய்திகளை பரப்பின. ஆனால் இந்தத் தகவல் அனைத்தும் பொய்யான செய்திகள், இனியாவது மக்கள் தேவையற்ற வதந்திகளை நம்புவதை குறைக்கவும்.