கொழும்பு இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு
புருசோத்தமன் (Author) Published Date : Apr 21, 2019 12:55 ISTworld news
இன்று காலை ஈஸ்டர் தின வழிபாடு நடந்த கொண்டிருந்த முக்கிய வழிபாட்டு தளங்களில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு பல்வேறு இடங்களில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை வந்த தகவுளின்படி சுமார் 137 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பிற்கான அதிகாரபூர்வ அறிக்கையை எந்த ஒரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை, இலங்கை அரசு மக்களை தவறான எந்த ஒரு செய்தியையும் நம்பவேண்டோம் என கேட்டுக்கொண்டுள்ளது. மக்கள் பதட்டம் அடையாமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
குண்டுவெடிப்பு ஈஸ்டர் வழிபாட்டு தளங்களில் மட்டுமில்லாமல் மூன்று பெரிய நட்சத்திர விடுதிகளிலும் நடந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு காரணத்தினால் விமான சேவைகள் பாதிப்படைந்துள்ளது.
இதுவரை வந்த தகவுளின்படி சுமார் 400 பேர் இதில் பலத்த காயம் அடைத்திருப்பதாகவும், 137 இறந்ததாக வந்த செய்தி இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மருத்துவமனையில் உள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.