திடீரென மாற்றப்பட்ட யூடியூப் கேமிங் தளம்
புருசோத்தமன் (Author) Published Date : Sep 19, 2018 16:02 ISTதொழில்நுட்பம்
கூகுள் நிறுவனத்தின் வலைதள செயலிகளும் ஒன்றான யுடியூப், இன்டர்நெட் வளர்ச்சி அடைந்ததில் இருந்து நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. தற்போது சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது. இதனால் தற்போது ஜிமெயில் பயனாளர்களை விட அதிக பயனாளர்களை யுடியூப் பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் 1.8 பில்லியன் பயனாளர்கள் யூடியூப் செயலியை உபயோகப்படுத்துகின்றனர்.
தனது பயனாளர்களுக்கு யூடியூப் மியூசிக், டிவி, கேம் என பல சிறப்பம்சங்களை வழங்கி வருகிறது. தற்போது மக்களின் பொழுது போக்கு அம்சத்தில் ஒன்றான யூடியூப் கேமை (Youtube Gaming) மாற்றம் செய்துள்ளதாக யூடியூப் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை யூடியூப் கேமிங் தளத்தின் தலைவரான ரியன் வாட் (Ryan Watt) என்பவரும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இவர் தனது டிவிட்டரில் "இந்த ஆண்டு யூடியூப்பில் கேமிங் என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப் மூலமாக 50 பில்லியன் கேமிங் பதிவுகளை அன்றாடம் பார்க்கின்றனர். கடந்த 12 மாதங்களில் மட்டும் 200மில்லியன் பயனாளர்கள் யூடியூப் கேமிங் தளத்திற்கு வந்து சென்றுள்ளனர். இதனால் தற்போது யூடியூப் கேமிங் தளம் யூடியூப் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார். இதன்படி யூடியூப் கேமிங் செயலி நேரடியாக யூடியூப் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. புதியதாக யூடியூப் மெயின் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் யூடியூப் கேமில் புதிய அப்டேட்களை வழங்கியுள்ளனர்.