ads
சியோமி நிறுவனத்தின் புதிய தொடர் வெளியீடு: விவரக்குறிப்புகள், விலை பற்றிய விவரம்
ராம் குமார் (Author) Published Date : Jul 02, 2019 16:49 ISTதொழில்நுட்பம்
சியோமி தனது புத்தம்புதிய ஸ்மார்ட்போன் எம்ஐ சிசி தொடரை இன்று சீன மார்க்கெட்டுகளில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தத் தொடரின் அம்சங்கள் ஃபேஷன் அதிகம் உள்ள இளம் வயதினரை கவரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. எம்ஐ சிசி தொடர் அதாவது எம்ஐ சிசி 9 மற்றும் எம்ஐ சிசி 9இ (Mi CC9 and Mi CC9e) ஆகியவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன. கடந்த ஆண்டு நவம்பரில் சியோமி நிறுவனத்தால் கையகப்படுத்திய பின்பு வெளியிடப்படும் ஸ்மார்ட்போன் தொடர் ஆகும்.
சிசி 9-சீரிஸின் விலை 1,599 யுவனாகவும் (இந்திய மதிப்பில் ரூபாய் 16,000) மற்றும் 2,990 யுவான் (இந்தியா மதிப்பில் ரூபாய் 30,000) விலையில் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன்கள் ஒரு நவநாகரீக வடிவமைப்பைக் கொண்டுள்ளதாகவும், குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7-சீரிஸ் செயலிகளால் இயக்கப்படும் என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சியோமி தலைமை நிர்வாக அதிகாரி லீ ஜுன், சிசி தொடர் வண்ணமயமான மற்றும் கிரியேடிவாக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் ஸ்மார்ட்போன்களை கலை மாணவர்கள் உள்ளடக்கிய சிக் மற்றும் கூல் என்ற குழுவினரால் வடிவமைக்கப்பட்டு வருகின்றது எனவும் கூறினார்.
எம்ஐ சிசி 9
எம்ஐ சிசி 9ஆண்ட்ராய்டு பைஇ அடிப்படையிலான எம்ஐயுஐ 10 மென்பொருளில் இயங்கும் என்றும் 6.39 அங்குல முழு எச்டி அமோல்ட் டிஸ்ப்ளே இடப்பெற்றுள்ளதாக நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 730 எஸ்ஓசி ஆல் இயக்கப்படும் என்றும் 4,000mAh பேட்டரியை கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 48 எம்.பி , 16 எம்பி மற்றும் 12 எம்பி என மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் எனவும் 32 எம்பி செல்பி சென்சார் கொண்டிருக்கும் என அறிவித்துள்ளனர்.
எம்ஐ சிசி 9இ
எம்ஐ சிசி 9இ சிறிய 5.97 அங்குல முழு எச்டி அமோல்ட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 710 எஸ்ஓசி ஆல் இயக்கப்படும் என்றும் 3,500mAh பேட்டரியை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஸ்மார்ட்போன் 48 எம்பி , 8 எம்பி மற்றும் 5 எம்பி என மூன்று பின் கேமரா அமைப்பும் 32 எம்பி முன் கேமரா அமைப்பும் கொண்டுள்ளது.
சிசி 9 இல் ஆசஸ் ஜென்ஃபோன் 6 இருக்கும் ஃபிளிப்-அப் கேமரா போன்ற அமைப்பு இடம்பெற்று உள்ளதாக ஊடக அறிக்கைகள் முன்பு புரிந்துரைத்தன. மேலும் மேய்ட்டு எனும் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு வெளியீடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சியோமி எம்ஐ சிசி 9 மற்றும் சிசி 9 இ வெளியீட்டு நிகழ்வு இந்தியா நேரப்படி மாலை 4:30 மணிக்கு வெய்போ மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என அறிவித்துள்ளனர்.