உலகம் முழுவதும் பேஸ்புக் சேவை முடங்கியதால் தவிக்கும் பயனாளர்கள்
புருசோத்தமன் (Author) Published Date : Sep 27, 2018 11:07 ISTதொழில்நுட்பம்
உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் பொழுதுபோக்கு செயலிகளுள் ஒன்றான பேஸ்புக் செயலி கடந்த சில தினங்களாக முடங்கியுள்ளது. இதனால் பயனாளர்கள் தங்களுடைய பேஸ்புக் பக்கங்களில் எந்த ஒரு பதிவினையும் பதிவிட முடியாமல் தவித்து வருகின்றனர். ஆண்டிராய்டு, iOS மற்றும் விண்டோஸ் போன்ற இயங்கு தளங்களிலும் சிலருக்கு பேஸ்புக் செயலியை திறக்க முடியவில்லை என்று புலம்புகின்றனர். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே பேஸ்புக் சேவை முடங்கியுள்ளது.
சிறந்த பொழுதுபோக்கு செயலிகளும் ஒன்றான பேஸ்புக் செயலியை உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 1.47 பில்லியன் மக்கள் உபயோகித்து வருகின்றனர். செய்திகள், படங்கள், விளையாட்டுக்கள், தொழில்துறை போன்ற பல துறைக்கும் பேஸ்புக் செயலி உதவியாக உள்ளது. கடந்த சில தினங்களாக பேஸ்புக் சரிவர இயங்காததால் சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் பயனாளர்களின் புலம்பல் அதிகமாகி கொண்டே செல்கிறது. தற்போது புது புது அப்டேட்களை வழங்கி வருவதால் அப்டேட் செய்யும் போது இது போன்ற பிரச்சனை ஏற்படுவது சாதாரணமாகி விட்டது.