ads
உலகின் முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி உடற்பயிற்சி மையம் இதோ
கௌரிசங்கர் (Author) Published Date : May 14, 2019 10:48 ISTதொழில்நுட்பம்
சூப்பர் டெக்னாலஜி உலகத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் ஒரு தொழில்நுட்பம் என்னவென்றால் அது விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் தான். நீங்கள் இருந்த இடத்தில் இருந்து கொண்டே, மிக விசித்திரமான அனுபவத்தை இந்த விர்ச்சுவல் ப்ரோகிராமை கொண்டு அனுபவிக்க வேண்டும், இதுவரை பார்த்திராத விஷயங்களை நேரில் பார்த்தது போன்ற அனுபவத்தை பெற முடியும், இவை அனைத்தையம் செய்ய நீங்கள் ஒரு கண்ணாடியை மட்டும் மாட்டிக் கொண்டால் போதுமானது. அப்படியான ஒரு தொழில்நுட்பம் தான் இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி ப்ரோகிராம்.
இதுவரை விளையாட்டை மையப்படுத்தியே இந்த விர்ச்சுவல் ப்ரோகிராம்கள் உருவாக்கப்பட்டன, அந்த ப்ரோகிராம்கள் வேறொன்றும் இல்லை வீடியோ கேம்களில் நாம் விளையாடுவது போலத்தான், வீடியோ கேம்களில் நாம் ப்ளேயராக திரையில் தெரிவோம். விர்ச்சுவல் ப்ரோகிராமில் வீடியோ கேமிற்கு உள்ளேயே சென்று விளையாடுவது போல் இருக்கும். இதுநாள் வரை வீடியோ கேம் விளையாடி விளையாடி கலந்தைகள் உடல் பருமன் அடைகிறார்கள் என்று கூறியவர்கள் எல்லாம். இந்த விர்ச்சுவல் வீடியோ கேமை பார்த்து வாயடைத்து போனார்கள். இந்த விர்ச்சுவல் ப்ரோகிராமை கொண்டு பிளாக் பாக்ஸ் என்ற நிறுவனம் அதன் அடுத்த கட்ட பரிணாமத்தை நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளனர்.
விச்சுவல் வீடியோ கேம் விளையாடிய நாம், அடுத்து விர்ச்சுவல் உடற்பயிற்சி செய்யப்போகின்றோம். கண்ணாடியை மாட்டிகொண்டால் போதும் நீங்கள் நீங்கள் ஸ்பைடர்மேனாகவு, பேட்மேனாகவோ அல்லது சூப்பர்மேனாகவோ மாறிவிடுவீர்கள், பிறகு என்ன எதிரே வரும் கேட்டவர்களை அடித்து துவம்சம் செய்யவேண்டியது தான். இதில் என்ன அற்புதம் என்று கேட்டால்? நீங்கள் எதிரியுடன் சண்டைப் போடும் முறைகள் மற்றும் அதன் விதிகள் உங்களை உடற்பயிச்சி செய்ய வைக்கும். இந்த விளையாட்டின் விளைவு, நமக்கு தெரியாமலேயே நாம் இன்றைக்கு செய்யவேண்டிய உடற்பயிற்சியை செய்து முடித்திருப்போம். இந்த விளையாட்டின் தயாரிப்பாளர்களான பிளாக் பாக்ஸ் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் இலவசமான டுடோரியல் ஒன்றை அறிவித்துள்ளனர்.
இது குறித்து ப்ளாக் பாக்ஸ் நிறுவனம், தன் இணையதளத்தில் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால், நீங்கள் ப்ளாக் பாக்ஸ் அறைக்குள் ஒரு பிரத்தியேகமான தலைகவசத்தை அணிந்து நுழைவீர்கள், நீங்கள் உள்ளே நுழைந்ததும் உங்களை சுற்றி மற்றொரு புதிய உலகம் உருவாகியிருக்கும்; என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த விர்ச்சுவல் ஜிம் பற்றி குறிப்பிடுகையில்; இதில் நீங்கள் உடற்பயிற்சி செய்யும்பொழுது, உங்கள் முழு உடலுக்கும் பயிற்சி கிடைக்கும், மேலும் நீங்கள் உடற்பயிற்சி செய்வது போன்று ஒரு உணர்வு இல்லாமலேயே, இதில் மூழ்கிவிடுவீர்கள்; என்று குறிப்பிட்டுள்ளது.