பழைய ஐபோன் மாடல்களில் வாட்சப் சேவை நிறுத்தம்
புருசோத்தமன் (Author) Published Date : Sep 19, 2018 12:28 ISTதொழில்நுட்பம்
பிரபல சமூக வலைதள செயலியான வாட்சப், விண்டோஸ், ஆண்டிராய்டு, iOS, பிளாக் பெற்ரி, சிம்பியன் போன்ற அனைத்து இயங்கு தளங்களிலும் செயல்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது லேட்டஸ்ட் வர்சனாக வாட்சப் 2.18.81 என்ற செயலி அனைத்து இயங்கு தளத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பழைய iOS தளங்களில் மட்டும் லேட்டஸ்ட் வாட்சப் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
பழைய ஐபோன் மாடல் மொபைல்களில் செயல்பட்டு வந்த வாட்ஸப்பிற்கு இனி அப்டேட் சேவையும் வழங்கவில்லை. இதனால் லேட்டஸ்ட் வாட்சப் வரசனையும் பழைய ஐபோன் பயனாளர்கள் உபயோகிக்க முடியாது. இது தவிர தற்போது செயல்பட்டு வரும் வாட்சப் செயலியை டெலிட் செய்து விட்டு மறுபடியும் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும் முடியாது.
தற்போது வாட்சப்பின் லேட்டஸ்ட் வர்சன் செயல்படுவதற்கு iOS 7 அல்லது iOS 8 இயங்கு தளம் தேவைப்படுகிறது. இதனால் பழைய ஐபோனில் செயல்பட்டு வந்த வாட்சப் சேவையை நிறுத்தியுள்ளது. மேலும் வரும் 2020 வரையிலும் வாட்சப் லேட்டஸ்ட் வற்சன் iOS 7 இயங்கு தளங்களிலே செயல்பட உள்ளது. இதனால் பழைய ஐபோன் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.