Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய சோதனை ஓட்டம்: பல்வேறு சமூக தளங்கள் இணைய வாய்ப்பு

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது ஸ்டேட்டஸ் அல்லது ஸ்டோரிஸுகளை நேரடியாக பிற சமூக தளங்களில் பகிரும் அம்சத்தை சோதித்து வருகின்றது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஜிமெயில் மற்றும் கூகிள் புகைப்படங்கள் போன்ற தளங்களில் நேரடியாக பதிவேற்றி கொள்ளும் வசதியை சோதனை செய்து வருகின்றனர் வாட்ஸ்அப் நிறுவனம்.  

சோதனையின் ஒரு பகுதியாக, வாட்ஸ்அப்பின் பீட்டா பயனர்களை  பட்டியலிட்டுள்ளனர். பீட்டா பயனாளர்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸின் கீழே ஒரு புதிய பகிர்வு விருப்பத்தைக் காணத் தொடங்குவார்கள். அதே கதையை வேறு எந்த பயன்பாடுகளிலும் பகிர்ந்து கொள்ள விருக்குகின்றோமா என்று அனுமதி கேட்கும். சோதனை அம்சம் மற்ற எல்லா பயன்பாடுகளையும் போலவே அதே ஐஒஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தரவு பகிர்வுகளை பயன்படுத்தும் என்று அறிக்கை கூறுகின்றது. 

தற்போது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வேறு தளங்களில் பகிர எந்த ஒரு வசதியும் ஏற்ப்படுத்தவில்லை மேலும் உடனடி செய்தியிடல் பயன்பாடு பயனரின் தரப்பில் செயல்படுத்தி இருக்க வேண்டும். இருப்பினும், சோதனை இடங்கள் பற்றிய விரிவான விவரங்கள் மற்றும் அம்சத்தின் இறுதி வெளியீடு பற்றி இன்னும் முழுமையாக தெரியவில்லை. 

வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை இணைத்து ஒரு ஒருங்கிணைந்த பயன்பாடாக  உருவாக்க பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் இந்த சோதனை மூலம் ஒரு முயற்சியை எடுத்துள்ளார். 2020 ஆண்டிற்குள் 2.6 பில்லியன்  பயனர்கள் குறுக்கு பயன்பாடு மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள இயலும். 

இந்த நடவடிக்கை மூலம், விளம்பரதாரர்களுக்கு பெரிய வாய்ப்பாக அமையும். வளர்ச்சி குறைந்து கொண்டிருக்கும் நேரத்தில் விளம்பரப் பிரிவை அதிகரிக்க ஒரு துடுப்பாக இந்த சோதனை அமைந்துள்ளது. இருப்பினும், பேஸ்புக் உடன் டேட்டா பகிர்வை உருவாக்குவதில் வாட்ஸ்அப் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முதலில் 2009 இல் வெளியிடப்பட்ட  வாட்ஸ்அப், ௨௦௧௪ ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனத்தால் வாங்கப்பட்டது.

வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய சோதனை ஓட்டம்: பல்வேறு சமூக தளங்கள் இணைய வாய்ப்பு