வாட்சப்பில் அடுத்து வரவுள்ள குரூப் காலிங் மற்றும் மல்டி சேர் சிறப்பம்சங்கள்
வேலு சாமி (Author) Published Date : Dec 06, 2018 18:57 ISTதொழில்நுட்பம்
வாட்சப் தனது ஆண்டிராய்டு பயனாளர்களுக்கு புது சிறப்பம்சங்களுடன் கூடிய பீட்டா வர்சன் 2.18.373 அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அப்டேட்டில் எழுத்து மற்றும் கோப்புகளை எண்ணற்ற நபர்களுக்கு பகிர்வது, குரூப் காலிங் வசதிக்கான ஷார்ட்கட், GIF புகைப்படங்களை தேடும் வசதி போன்ற பல வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் பிறகு அடுத்ததாக வரவுள்ள 2.18.366 வர்சனில், இதர செயலிகளில் இருந்து ஷேர் செய்ய விரும்பும் எழுத்துக்கள் மற்றும் கோப்புகளை (Files) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நண்பர்களுக்கு பகிரும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த அம்சத்தை சோதனை செய்து வருவதாக வாட்சப் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அம்சம் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ போன்றவற்றை ஷேர் செய்வதற்கு முன்பே அதனை சரிபார்க்கவும் ஆப்சன் கொடுக்க உள்ளனர். இது தவிர குரூப் காலிங் வசதியை எளிமையாக்க ஷார்ட்கட் பட்டனை கொடுக்கும் சோதனை தற்போது நடைபெற்று வருகின்றது.