ads

ஜியோ போனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாட்சப் வசதி

அம்பானியின் ஜியோ போனில் வாட்சப் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அம்பானியின் ஜியோ போனில் வாட்சப் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜியோ போன் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த மொபைலின் இரண்டாவது மாடலும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜியோவின் நிறுவனரான முகேஷ் அம்பானி ஜியோ போனில் வாட்சப், யூடியூப், பேஸ்புக் போன்ற பல சிறப்பம்சங்கள் அறிமுகப்படுத்த படுவதாக பொது கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

தெரிவித்த அடுத்த ஒரு மாதத்திலே ஜியோ போனில் வாட்சப் வசதி இணைக்கப்பட்டுள்ளது. ஜியோ போனின் செயல்பாட்டிற்கேற்ப வாட்சப் செயலி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளியான இரண்டு மாடல் ஜியோ போனிலும் வாட்சப் சேவையை பெற வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலில் ஜியோ ஸ்டோரில் இருந்து வாட்சப் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

மேலும் வரும் அனைத்து ஜியோ போனிலும் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் வாட்சப் செய்து தடையின்றி வழங்கப்படுகிறது. டவுன்லோட் செய்த பிறகு வாட்சப் செயலியை உபயோகப்படுத்த தங்களது மொபைல் எண்ணை ரிஜிஸ்டர் செய்து கொண்டு மொபைல் எண்ணை உறுதி படுத்த வேண்டும். இதன் பிறகு மலிவான ஜியோ போனிலும் வாட்சப் செயலியின் சிறப்பம்சத்தை உபயோகப்படுத்தி நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் மெசேஜ்களை அனுப்பலாம்.

ஜியோ போனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாட்சப் வசதி