ads

இந்த வால் பேப்பரை உபயோகித்தால் உங்கள் மொபைலின் கதை முடிந்தது

மொபைல் வால் பேப்பர் வைரஸ். Wallpaper soft-brick smartphones

மொபைல் வால் பேப்பர் வைரஸ். Wallpaper soft-brick smartphones

கொரோனா தாக்கம் குறைந்தபாடில்லை அதற்குள் புயல் வந்தது, பின் வெட்டுக்கிளி வந்தது, இப்பொழுது  நமது மொபைலை முற்றிலும் நாசம் செய்ய புதிய வைரஸ் ஒன்று புகைப்படத்தின் மூலம் வந்துள்ளது. இந்த புகைப்படத்தை உங்கள் மொபைல் வால் பேப்பராக செட் செய்தால், உங்களின் மொபைல் முழுவதுமாக செயல்படாது, நாசம் ஆகிவிடும். உங்கள் மொபைலில் இருக்கும் எந்த ஒரு தகவல்களையும் எடுப்பது கடினம்.

ஒரு புகைப்படத்தின் மூலம் எப்படி இது சாத்தியம் என்று நம்மை வியக்கவைக்கும் அளவிற்க்கு இது மோசமான ஒரு வைரஸ் படம். இந்த புகைப்படம் ஒரு சாதாரண மேகங்கள் சூழ்ந்து காணப்படும் இயற்க்கை அழகை கொண்ட  புகைப்படம்.  இந்த படத்தின் உயரம் 2560 மற்றும் அகலம் 1440 (Width 2560 x height 1440). இதை தவிர வேறு எந்த ஒரு தகவல்களையும் இந்த புகைப்படத்தில் இருந்து எடுக்க முடியவில்லை.

பொதுவாக சிறிய திரை கொண்ட மொபைலில் இதை உபயோகித்தால் கண்டிப்பாக மொபைல் சுவிட்ச் ஆப் ஆகிவிடும், பின் இயங்க தொடங்கும். ஆனால் பெரிய திறைகொண்ட மொபைலில் இதை செலுத்தினால், வீடியோவில் காண்பித்ததை போல் இயங்குகிறது. 

இந்த வால் பேப்பர் வைரஸ் 31-மே-2020 காலை முதல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இதை பகிரும் போதே, இதை பயன்படுத்தினால் கண்டிப்பாக உங்கள் மொபைல் நாசமாகிவிடும், இதை யாரும் முயற்சி செய்ய வேண்டாம், மேலும் யார் உங்களுக்கு இதை அனுப்பினாலும், ஜாக்கிரதையாக இருக்கும்படி  பகிரப்பட்டது. 

இதன் ஆபத்தை பெரிதுபடுத்தாத சிலர், என்ன செய்கிறது என்று பார்க்க, இந்த புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து, தங்களது மொபைலில் வால் பேப்பராக செட் செய்தார்கள். அதை வீடியோ எடுத்தும் பகிர்ந்தனர், இதன் ஆபத்தை சற்றும் எதிர்பாராத இவர்கள் தங்களது மொபைல் செயல்படாமல் போனதை வருத்தத்துடன் வீடியோ மூலம் தெரிவித்தனர்.

வால் பேப்பராக செட் செய்தபின் என்ன நடக்கும்? இந்த புகை படத்தை வால் பேப்பராக செட் செய்தவுடன், மொபைலின் திரை ஒழுங்காக செயல்படாது. போன்  அழைப்புகளுக்கு பதிலளிக்க முடியும் ஆனால் ஏதேனும் ஆப்களை பயன்படுத்தினால், உடனடியாக மொபைல் சுவிட்ச் ஆப் ஆகிவிடும். பிறகு உங்களால் எந்த ஒரு மொபைல் ஆப்களையும் உபயோகிக்க முடியாது. மேலும் சிலர் கூறுகையில், இந்த வைரஸ் மூலம் நமக்கு தெரியாமல் நம் மொபைலில் இருக்கும் தகவல்களை திருட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மொபைலை பழைய நிலைக்கு கொண்டுவருவது எப்படி? இவ்வாறு நடக்கும் போது, மொபைலில் மூன்று செயல்முறைகளை காண்பிக்கும். அதில் இரண்டாவது செயல்முறை "Erase App Data" எனும் முறையை தொடரலாம். இந்த செயலால் உங்களின் முக்கிய தகவல்களையும் மற்றும் புகைப்படங்களை பாதுகாப்பாக எடுத்திட "Erase App Data " உதவும்.

இந்த வால் பேப்பரை உபயோகித்தால் உங்கள் மொபைலின் கதை முடிந்தது

"Erase App Data" என்பது உங்களின் மொபைலில் உள்ள ஏதாவது ஒரு செயலியால் ஏற்பட்டிருக்கும் தவறை எடுத்து பின் , SAFEMODE மூலமாக உங்கள் மொபைல் இயங்க தொடங்கும். இவ்வாறு செல்லும் போது, உங்கள் புகைப்படங்கள் மற்றும் முக்கிய தகவல்களை பாதுகாப்பாக கணினிக்கு மாற்றிவிடலாம். 

உங்கள் தகவல்களை பாதுகாப்பாக எடுத்தபின், நீங்கள் "Hard Reset" முறை மூலம் உங்களின் மொபைலை பழைய நிலைக்கு கொண்டுவரலாம்.

இதே பிரச்சினை 2018 ஆம் ஆண்டில் கூகிளின் ஆண்ட்ராய்டு வெளியீட்டு டிராக்கரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், கூகிள் டெவலப்பர்கள் தங்களால் சிக்கலை சரிசெய்ய முடியவில்லை என்று கூறி அதை ஒதுக்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வால் பேப்பரை உபயோகித்தால் உங்கள் மொபைலின் கதை முடிந்தது