விவோ நிறுவனத்தின் புதிய மற்றும் வேகமான சார்ஜிங் அம்சம்:13 நிமிடங்களின் முழு சார்ஜிங் வசதி
ராம் குமார் (Author) Published Date : Jun 26, 2019 20:54 ISTதொழில்நுட்பம்
சீன கைபேசி தயாரிப்பாளரான விவோ நிறுவனம் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் 120W ஐ அறிமுகப்படுத்தியது. விவோ நிறுவனத்திற்கென உரிமை கொண்ட120W அல்ட்ரா-ஹை பவர் சார்ஜிங்கை வழங்கும் தொழில் முறையால் தயாரிக்கப்பட்டு, முதன்மையாக இந்நிறுவனம் வெளியிடுகின்றது. ஷாங்காயில் நடந்து வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2019 இல் புதிய வசதியை வெளியிட்டுள்ளது.
ஆய்வக சோதனையின் தரவுகளின்படி, விவோ சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ்120W 4,000 எம்ஏஎச் பேட்டரியை ௦-50 % சார்ஜ் செய்ய ஐந்து நிமிடங்கள் மட்டுமே எடுத்து கொள்கின்றன. மேலும் ஸ்மார்ட்போனை 13 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என்று நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கைபேசி தயாரிப்பாளர் தனது முதல் வணிக 5 ஜி ஸ்மார்ட்போனையும் காட்சிப்படுத்தி உள்ளனர். இந்த கைபேசியானது இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டிற்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. வகை சி சார்ஜ் கேபிளுடன், பயண சார்ஜரும் புதிய சார்ஜ் பம்ப் தொழில்நுட்பத்துடன் இணைந்து வருகின்றது.
புதுமையான ஸ்மார்ட் சாதனங்கள் தயாரிப்புகள் மூலமும், ஸ்மார்ட் சேவைகளையும் பயனர்களுக்கு வழங்குவதே விவோவின் நோக்கம் என்று விவோவின் மூத்த துணைத் தலைவர் ஸ்பார்க் நி கூறினார். புதுமைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மேம்படுத்துவதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் நம்புகின்றோம் எனவும் தெரிவித்தார்.
புதிதாக 5 ஜி தொலைத்தொடர்பு கொண்ட ஸ்மார்ட்போனின் அம்சங்களான 5 ஜி கிளவுட் கேம் மற்றும் 5 ஜி ஸ்கிரீன் மிரரிங் உள்ளிட்ட 5 ஜி பயன்பாடுகளையும் நிறுவனம் காட்சிப்படுத்தியது. வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை கொண்டு வந்தால் ஸ்மார்ட் போன்களின் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும்.
இதற்கு முன், விவோவின் சிறந்த சார்ஜிங் தீர்வு 44W சார்ஜர் ஆகும். இது ஸ்மார்ட்போனின் 4,000 எம்ஏஎச் பேட்டரியை சுமார் 45 நிமிடங்களில் சார்ஜ் செய்ய இயலும். வணிக ரீதியாக வேகமாக சார்ஜ் செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் ஒப்போ நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்டது. ஒப்போவின் எக்ஸ் லம்போர்கினி பதிப்பு சூப்பர் விஓஓசி சார்ஜர் மூலம் 35 நிமிடங்களில் வெற்று 3,400 எம்ஏஎச் பேட்டரியை முழுகையாக சார்ஜ் செய்யப்படும்.