விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் தொடர்: இம்மாத வெளியீடு
ராம் குமார் (Author) Published Date : Jun 13, 2019 16:53 ISTதொழில்நுட்பம்
சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுமணம் ஆனா விவோ விரைவில் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் தொடர் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த தொடரின் தொடக்கமாக விவோ z1 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் வெளியிடவுள்ளன. சாம்சங் நிறுவனத்தில் இருந்து வெளி வரும் M தொடர் ஸ்மார்ட்போன்களை பின்தள்ளி விவோவின் புதிய வெளியீடு ஆதிக்கம் செலுத்தும் என எதிர் பார்க்கப்படுகின்றது. சாம்சங் M40 ஸ்மார்ட்போனுடன் விவோவின் z1 ப்ரோ நெருக்கமான போட்டியில் உள்ளது.
பின்வரும் பல்லாயிரம் வருடங்களுக்கு பல மேம்பாடுகளுடம் M தொடரை வெளியிடுவதை தத்துவமாக கொண்ட சாம்சங் நிறுவனத்தை போல் விவோ நிறுவனமும் z தொடரை வெளியிட உள்ளது. விவோவின் பிராண்ட் வியூக இயக்குனர் நிபன் மரியா "புதிய Z தொடர் அடுத்த பல் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யும் வகையிலும், ஜீ தலைமுறையினரின் மாறும் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
விவோ Z1 ப்ரோ சிறப்பு அம்சங்கள்:
விவோ Z1 ப்ரோ இம்மாதம் வெளிவரவுள்ளது. அண்ட்ராய்டு 9 இயக்க முறைமை (OS) மூலம் செயல்படுகின்றது. ஸ்மார்ட்போன் 3ஜி, 4ஜி, வைஃபை ப்ளூடூத் இணைப்பு வசதிகளும் உள்ளன. 128ஜிபி உள் சேமிப்புடன் ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிரகன் செயலி மூலம் இயங்கும். ரேம் 8 ஜிபியோடு அதிக இடம் கொண்ட பயன்பாட்டுகளை எவ்வித இடைவெளி இன்றி பயன்படுத்த உதவும்.
போன் திரை 6.53 இன்ச் நீளமும், மூன்று பின் காமெராக்களும் கொண்டுள்ளது. கேமரா தரம் 16MP+8MP+2MP ஆகா உள்ளது. முன் கேமரா 16MP தரம் கொண்டு உள்ளது. ஸ்மார்ட்போன் பின்னால் ஒரு பளபளப்பான மற்றும் ஈர்க்கும் வண்ணங்களில் வடிவமைப்பு கொண்டுள்ளது. ஒரு வட்ட கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
விவோ நிறுவனம் வேகமாக சார்ஜ் ஏறும் வசதியை மேம்படுத்தியுள்ளனர். 3700mAH தரம் கொண்ட பேட்டரி வழங்கியுள்ளது. விவோ நிறுவனம் ஆன்லைன் மார்க்கெட்டிங்காக பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. பிளிப்கார்ட் மூலம் விற்பனைகளை தொடங்கவுள்ள. இந்தியாவில் ஸ்மார்ட்போன் விலையும், வகைகள் விவரங்கள் பற்றி நிறுவனம் எந்த தகவலும் வெளியிடவில்லை. ஸ்மார்ட்போன் 19,௦௦௦ ரூபாய் விலை நிர்ணயிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.