அரைமணி நேரம் தொடர்ந்து போன் பேசினால் மூளை புற்றுநோய் ஏற்படும்
புருசோத்தமன் (Author) Published Date : Oct 02, 2018 12:31 ISTதொழில்நுட்பம்
உலகம் முழுவதும் செல்போன் அதிகமாக பயன்படுத்தும் மக்களின் உடல்நிலை குறித்து ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர்கள் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. செல்போன் அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு 10 ஆண்டுகளுக்குள் மூளை புற்றுநோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் பயன்பாடு கடந்த 2011ஆம் ஆண்டு வரையிலும் 10-15 சதவீதம் வரையிலும் அதிகரித்து வந்தது.
ஆனால் கடந்த 2017-2018ஆண்டுகளில் மட்டும் 40-50 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. நமக்கு அன்றாட தேவைகளும் ஒன்றாக மாறிய செல்போன் சேவைக்காக, செல்போன் டவர்கள் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை செயல்பட்டு வருகின்றது. இதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் பறவைகள், விலங்கினங்களை கடுமையாக பாதிக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது இந்த கதிர்வீச்சுகள் மனிதர்களையும் பாதிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்போனில் தொடர்ந்து மணிக்கணக்கில் பேசுவதாலும் நாள் முழுக்க செல்போனை உத்து பார்ப்பதாலும் மக்களுக்கு ஏராளமான நோய்கள் வந்தடைகிறது. குறிப்பாக 30 நிமிடங்களுக்கு மேலாக தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி வந்தால் அவருக்கு 10 ஆண்டுகளில் மூளை புற்றுநோய் ஏற்படும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளிவரும் ஸ்மார்ட்போன்கள் அதிகப்படியான கதிர்வீச்சுகளை வெளியேற்றி வருகின்றன.
இந்த ஸ்மார்ட்போன்களில் இருந்து வரும் சூடான கதிர்வீச்சுகள் மக்களை கடுமையாக பாதிக்கின்றன. உதாரணமாக ரெட்மி 4A போன்ற ஸ்மார்ட்போன்களை வெளியே செல்லும் போது எடுத்து செல்லவே முடிவதில்லை. ஆடைகளில் வைக்க முடியாத அளவிற்கு கதிர்வீச்சுகளை வெளியேற்றி வருகின்றன. செல்போன்களால் வரும் ஆபத்துகளை அறிந்திருந்தும், ஏராளமானோர் தூங்கும் போது அருகில் வைத்து விட்டு தூங்குவது, சார்ஜ் போட்டு கொண்டே செல்போன் பேசுவது, தொடர்ந்து மணிக்கணக்கில் பேசுவது போன்ற பழக்கங்களை செய்து வருகின்றனர். மேலும் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதால் கடந்த 20 வருடங்களில் மூளை புற்றுநோயால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உயர்ந்துள்ளது.