ads
புதிய தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் மைக்ரோசாப்ட்
வேலு சாமி (Author) Published Date : Dec 07, 2018 18:45 ISTதொழில்நுட்பம்
ஒருவருடைய முகத்தை ஸ்கேன் செய்து அவர் வேறு எந்த இடத்தில் இருந்தாலும் எளிமையாக கண்டு கொள்ளும் வகையில் 'facial recognition' தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கி வருகின்றது. இதன் முதற்கட்ட சோதனை ஓட்டம் இந்தியாவில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டெல்லி காவல் அதிகாரிகள் காணாமல் போன 3000க்கும் மேற்பட்ட குழந்தைகளை நான்கு நாட்களுக்குள்ளே கண்டுபிடித்துள்ளனர்.
இதோ போன்று அமெரிக்காவில் வீரர்களின் உருவப்படத்தை வைத்து 1860இல் உள்நாட்டு போரின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில், அடையாளம் காணாத வீரர்களின் தகவல்களையும் இந்த தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி கண்டுபிடித்துள்ளனர். இது தவிர மருத்துவ துறையில் ஆப்பிரிக்க, ஆசிய, அமெரிக்க மக்களிடையே அரிய மரபணு நோயை கண்டறியவும், ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது PIN நம்பருடன் முகத்தை பரிசோதனை செய்து பணம் எடுப்பதற்கும் இந்த தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளனர்.
ஆனால் அதே சமயம் இந்த தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்துவதால் மக்களின் தனிநபர் தகவல்களுக்கு பாதிப்பு ஏற்பட அதிகபட்ச வாய்ப்புள்ளதாக மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித் என்பவர் தெரிவித்துள்ளார். இதனால் இந்த தொழில்நுட்பத்தில் கூடுதல் விதிமுறைகளை உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.