ads

இனி ஸ்மார்ட்போன்கள் மூலமே டிவி சேனலை மாற்றலாம்

டிவி சேனல்களை செட்டஸ் பிளே செயலி உதவியுடன் ஸ்மார்ட்போன் மூலமே மாற்றலாம்.

டிவி சேனல்களை செட்டஸ் பிளே செயலி உதவியுடன் ஸ்மார்ட்போன் மூலமே மாற்றலாம்.

தற்போது மக்களுக்கு சிறந்த பொழுது போக்கு அம்சமாக விளங்கி வருவது தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சிகளில் பல சிறப்பம்சங்களுடன் புது புது மாடல்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் எத்தனை மாடல்கள் வந்தாலும் இன்னும் அந்த டிவியை மாற்றுவதற்கு ரிமோட்கள் தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரிமோட்கள் தொலைத்து விட்டு நமது மக்கள் அதை தேடியே சலித்து விடுகின்றனர். தற்போது அதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் பிறந்து விட்டது. இனி டிவியில் சேனல்களை ஸ்மார்ட்போன்கள் மூலமாகவே மாற்றலாம்.

தற்போது வெளிவரும் டிவிக்களில் ஆண்டிராய்டு செயலிகள் கொண்டிருப்பதால் சேனல்களை செயலி மூலமே ஸ்மார்ட் போன்கள் உதவியுடன் மாற்றலாம். இதற்கு டிவி மற்றும் ஸ்மார்ட் போன்கள் இரண்டிலும் செட்டஸ் பிளே (CetusPlay) என்ற செயலினை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். டிவியில் இந்த செயலினை பென்ட்ரைவ் (Pendrive) மூலமாகவும் இன்ஸ்டால் செய்யலாம்.

இன்ஸ்டால் செய்த பிறகு செட்டஸ் பிளே (CetusPlay) செயலியை திறந்தால் உங்களிடம் உரிய அனுமதியை (Permission) கேட்கும். அனுமதி அளித்த பிறகு உங்களுக்கு DPad Mode, TouchPad Mode, Mouse Mode போன்ற அம்சங்கள் திரையிடப்படும். இதில் உங்களுக்கு விருப்பமானவற்றை தேர்வு செய்து ஸ்மார்ட்போன் மூலமே டிவி சேனல்களை மாற்றலாம். மேலும் டிவியை ஸ்மார்ட்போனுடன் இணைத்த பிறகு ஸ்மார்ட்போன் மூலமே டிவியில் தேவையான செயலியை இன்ஸ்டால் செய்யவும், டிவி திரையை புகைப்படம் எடுக்கவும் (Screen Capture) பயன்படுத்தலாம்.

இனி ஸ்மார்ட்போன்கள் மூலமே டிவி சேனலை மாற்றலாம்