வாடிக்கையாளர்களுக்கு இப்படியும் சேவைகளை வழங்குகிறது உபர் நிறுவனம்
ராம் குமார் (Author) Published Date : May 15, 2019 22:12 ISTதொழில்நுட்பம்
வாடிக்கையாளர்கள் வம்பளக்கிற ஓட்டுனர்களை விரும்பாதவர்களுக்கு உலகளாவிய சவாரியானா உபர் தனது ஆடம்பர சேவைகளில் அமைதியான ஓட்டுனர்களை தேர்தெடுக்கும் சேவையை வழங்கியுள்ளது.
பல ஆண்டுகளில் பிரீமியம் சேவைகளுக்காக முதன்முதலில் இச்சேவை மேம்படுத்தப்பட்டுள்ளது. மேம்பாட்டின் கீழ், உபர் அதன் பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு தங்களின் சாமான்களை வைப்பதற்கான உதவிகளையும் மற்றும் சவாரி முன்பதிவு போது தங்களுக்கு விருப்பமான வெப்பநிலை குறிப்பிடவும் சேவையும் வழங்கியுள்ளது.
வாடிக்கையாளர்கள் தாமதமாக வாகனம் ஏறும் பட்சத்தில் முன் கூடுதல் நேரம் கேட்கலாம் மேலும் தாமதத்திற்கனா கட்டணத்தையும் வசூலிக்காது அதுமட்டும் இல்லாது ஏதேனும் ஒரு தவறு நேரிட்டால் வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி நேரடியாக அழைத்து பேச இயலும் என்று அறிக்கை கூறுகின்றது.
இந்த அம்சத்தின் அதிகமான பகுதியும், புதுப்பிப்பு விவரங்களும் இப்போது தெளிவாக வெளியிடவில்லை . உபர் பிளாக் மற்றும் உபர் பிளாக் எஸ்யூவி ஆகியவை, நிறுவனத்தின் உயர் தர வாகனங்கள். வாடிக்கையாளருகளுக்கு பிரீமியம் வாகன சேவைகளையும் வழங்கி வருகிறது.
ஒரு ஸ்மார்ட்போன் பயன்பாடு மூலம் பதிவு செய்யக்கூடிய ஒரு ஆடம்பர கார் சேவையாக முதலில் உபர் நிறுவப்பட்டது, பின்னர் உபர் பூல் பயன்பாடு குறைந்த விலை சேவைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உபர் நிறுவனம் இந்தியாவில் 2013 ஆம் ஆண்டில் யூபர் பிளாக் சேவைகளை அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு பிரீமியம் உபர் எஸ் 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. உபர் சேவைகள் 31 நகரங்களில் செயல்பட்டு வருகிறது.