டிவிட்டரில் வழங்கப்பட்டுள்ள புதிய டைம்லைன் அப்டேட்
புருசோத்தமன் (Author) Published Date : Sep 18, 2018 05:30 ISTதொழில்நுட்பம்
அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான சமூக வலைதள செயலிகளுள் ஒன்றான டிவிட்டர், கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 12 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் ஆண்டிராய்டு, iOS மற்றும் விண்டோஸ் தளங்களில் செயல்பட்டு வரும் டிவிட்டர் செயலியானது கிட்டத்தட்ட 33 மொழிகளில் செயல்பட்டு வருகின்றது. பயனாளரின் தேவைக்கேற்ப எளிதாக உபயோகப்படுத்தும் வகையில் புது புது அப்டேட்களை வழங்கி வருகிறது.
கடந்த 2016முதல் டிவிட்டரில் பயனாளரின் டைம்லைன் பொதுவாகவே தலைகீழ் நேரத்தில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் சிறந்த ட்வீட்கள் மட்டும் முதலில் காட்டும். தற்போது டிவிட்டர் டைம்லைனில் ட்வீட்களை நேரத்தை பொருத்து வரிசைப்படுத்துவதாக டிவிட்டர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு டிவிட்டர் பயனாளரின் டைம்லைன் யார் சென்று பார்த்தாலும் நேரப்படி வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.
இதனை பெற பயனாளர்கள் டிவிட்டர் Settingsஇல் உள்ள 'Show the best Tweets first' என்ற ஆப்ஷனை அன்க்ளிக் செய்திருக்க வேண்டும். டிவிட்டரில் டைம்லைன் குறித்து வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கருத்துக்கள் பதிவு செய்து வந்தனர். இதனால் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப டிவிட்டர் டைம்லைனை மாற்றம் செய்யவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தவிர இந்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் வாடிக்கையாளர் எண்ணிக்கை முதல் காலாண்டை விட 1 பில்லியன் அளவிற்கு குறைந்துள்ளது. அதாவது முதல் காலாண்டில் 336 பில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டிருந்த நிலையில் இரண்டாவது காலாண்டில் 335 பில்லியன் அளவிற்கு குறைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் கருத்திற்கேற்ப டிவிட்டர் நிறுவனம் புது அப்டேட்களை வழங்கி வருகிறது.