ads
டிவிட்டரில் மொமண்ட்ஸ் ஆப்சன் நீக்கப்படுவதாக அறிவிப்பு
புருசோத்தமன் (Author) Published Date : Oct 10, 2018 16:45 ISTதொழில்நுட்பம்
ட்வீட்டர் செயலியில் வழங்கப்பட்டுள்ள மொமண்ட்ஸ் (Moments) அம்சத்தை நீக்குவதாக ட்வீட்டர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி ஆண்டிராய்டு மற்றும் iOS இயங்கு தளங்களில் செயல்பட்டு வரும் ட்வீட்டர் செயலியில் உள்ள மொமண்ட்ஸ் அம்சம் வரும் அக்டொபர் 23ஆம் தேதிக்கு பிறகு நிரந்தரமாக நீக்கப்படுகிறது. விண்டோஸ் மற்றும் டெஸ்க்டாப் பயனாளர்கள் தொடர்ந்து மொமண்ட்ஸ் அம்சத்தை பயன்படுத்தலாம்.
மொமண்ட்ஸ் அம்சம் மூலம் பயனாளர்கள் தங்களது நினைவுகள் அல்லது தற்போது அதிகம் தேடப்படும் செய்திகளை மொமண்ட்ஸ்-ஆக உருவாக்கி மற்றவர்களுக்கு தெரியப்படுத்தலாம். இந்த அம்சம் விண்டோஸ், ஆண்டிராய்டு போன்ற அனைத்து இயங்கு தளத்திலும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ஸ்மார்ட்போன்களில் செயல்பட்டு வரும் ட்வீட்டர் செயலியில் உள்ள மொமண்ட்ஸ் அம்சத்தை பராமரிப்பது மிகவும் சிரமமாக இருந்துள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு மட்டும் மொமண்ட்ஸ் அம்சத்தை நீக்குவதாக ட்வீட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து டிவிட்டர் நிறுவனம் கூறுகையில் "வரும் அக்டோபர் 23ஆம் தேதி முதல் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனாளர்களுக்கு டிவிட்டர் செயலியில் வழங்கப்பட்டுள்ள மொமண்ட்ஸ் அம்சம் நீக்கப்படுகிறது. பயனாளர்களுக்கு அடிக்கடி உபயோகப்படாமல் உள்ள ஆப்ஷன்களை நீக்கி வருகிறோம். இதனால் மொமண்ட்ஸ் அம்சம் நீக்கப்படுகிறது. இதற்கு பதிலாக பயனாளர்கள் விரும்பக்கூடிய வகையில் புதிய அப்டேட்டை வழங்குவோம்" என்று டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.