ads
சோனி நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கொண்ட நாய் ரோபோட்
புருசோத்தமன் (Author) Published Date : Sep 24, 2018 12:44 ISTதொழில்நுட்பம்
தற்போது உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோட்கள் ஆதிக்கம் பொழுதுபோக்கு முதல் தொழில்துறை சார்ந்த துறைகள் வரை அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் பொழுதுபோக்குக்காக பல செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோட்களை பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் சோனி நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கொண்ட நாய் ரோபோட்கள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது.
ஜப்பானை சேர்ந்த நிறுவனமான சோனி தனது முதல் மெக்கானிக் நாய் ரோபோட்டை 1999ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இதன் பிறகு முதல், இரண்டு மற்றும் மூன்றாம் தலைமுறை அம்சங்கள் கொண்ட ரோபோட்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தியது. தற்போது நான்காம் தலைமுறை ரோபோட்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் மக்களிடையே ஐபோ பப்பி ரோபோட் (Aibo puppy robot) என்ற ரோபோட் விற்பனையில் நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறது.
ஐபோ (Aibo) என்பதற்கு 'துணை (companion)' என்ற பொருள் உண்டு. அதற்கேற்ப இந்த பப்பி ரோபோட்டும் குடும்பத்துடன் ஒன்றி பழகும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோட் பல வித்தியாசமான கோணங்களில் தனது உணர்ச்சிபூர்வமான முகபாவனையை வெளிப்படுத்தும். இது தவிர இதனுள் உள்ள செயற்கை நுண்ணறிவை கொண்டு வளர்க்கும் திறனையும் கற்பிக்கும். மேலும் ஒரு செயலை செய்வதற்கு தனது குரல் மூலம் பேசவும் ஒலியையும் எழுப்பும். இந்த பப்பி ரோபோட்டானது கண், காது, வால் அசைவு மற்றும் குரல் மூலம் மனிதர்களிடம் உரையாடும். இப்படி பல சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ரோபோட்டானது 2899 டாலருக்கு விற்கப்பட்டு வருகிறது.