ads
இன்று முதல் சாம்சங் நோட் 9 மொபைல் விற்பனை தொடங்கியது
புருசோத்தமன் (Author) Published Date : Aug 23, 2018 16:32 ISTதொழில்நுட்பம்
நேற்று இந்தியாவில் சாம்சங் நிறுவனம் சாம்சங் நோட் 9 மொபைலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. உலகில் அதிக தொழில் நுட்பத்தில் உள்ள மொபைல் இதுவே. இந்த மாடலில் குறைந்தது 1TB சேமிப்பு ஸ்டோரேஜ் திறன்கொண்ட மொபைல் மற்றும் 8 GB வேகமாக செயல்பட கூடிய ரேம் வசதி உள்ளது.
இந்த மாடலின் முக்கிய அம்சங்களில் ஒன்று, ஸ்டைலஸ் பென். இதற்கு முந்தய மாடலில் உள்ள ஸ்டைலஸ் பென்னில் ப்ளூடூத் வசதி இல்லை, இந்த புதிய மாடலில் ப்ளூடூத் வசதியுடன் பல சாம்சங் பொருட்களை கையாளலாம்.
இன்று முதல் விற்பனை தொடங்கியுள்ளது. HDFC மற்றும் PayTm நிறுவனங்கள் ரூபாய் 6000 வரை கேஷ்பேக் வசதிகளுடன் ஒன்பது மாதங்கள் வட்டியில்லா தவணை முறையில் பெற்று கொள்ளலாம். ஒன்பது மாதங்களுக்கு மேல் செல்லும் தவணைகளில் கூடுதல் வட்டி பெறப்படுகின்றது. மேலும் ரூபாய் 22,000 மதிப்புள்ள கியர் ஸ்போர்ட் வாட்ச் வெறும் ரூபாய் 5000 பெறலாம். இந்த சலுகை வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரை மட்டுமே.