நான்கு கேமிராக்களை கொண்டு அட்டகாசமாக களமிறங்கும் புதிய சாம்சங் கேலக்சி மாடல்
புருசோத்தமன் (Author) Published Date : Sep 17, 2018 11:26 ISTதொழில்நுட்பம்
மொபைல் உலகில் முடிசூடா மன்னனான சாம்சங் நிறுவனத்தின் புதிய மாடலான காலக்சி நோட் 9 வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 512GB இன்டர்னல் மற்றும் 8GB ரேம் போன்ற பல அட்டகாசமான சிறப்பம்சங்களை கொண்ட இந்த மாடல் 67,900 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த மாடலுக்கு பிறகு சாம்சங் நிறுவனம் தனது அடுத்த படைப்பினை வரும் அக்டொபர் 11ஆம் தேதியில் அறிமுகப்படுத்த உள்ளது.
வாடிக்கையாளர்களை குஷிப்படுத்த '4xFun' என்ற வார்த்தையை வெளியிட்டுள்ளது. இதனால் அடுத்த வெளிவரவுள்ள மாடலின் சிறப்பம்சம் என்னவாக இருக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி நான்கு கேமிரா வசதியுடன் கூடிய புதிய கேலக்சி மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இரண்டு கேமிராக்கள் முன்பும், இரண்டு கேமிராக்கள் பின்பும் இருக்கலாம் என்று கூறி வந்த நிலையில் நான்கு கேமிராக்களுமே பின் திரையில் வடிவமைக்கப்பட்ட புதிய கேலக்சி A சீரிஸ் மாடலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனுடன் கைரேகை ஸ்கேனர் வசதியும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த புதிய மாடலுக்காக சாம்சங் பயனாளர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். சாம்சங் இந்த அறிமுக நிகழ்ச்சி சாம்சங் அதிகாரபூர்வ இணையத்தில் நேரலையாக பயனாளர்களுக்கு காண்பிக்கவுள்ளனர்.மேலும் சாம்சங் நிறுவனம் தனது முதல் வளைக்கக்கூடிய மாடல் ஸ்மார்ட்போனை வரும் நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யவுள்ளது.