ரெட்மி நோட் 7 ப்ரோ ஜூன் 30 வரை திறந்த விற்பனை: நோட் 7 ப்ரோ பற்றிய சிறிய கண்ணோட்டம்
ராம் குமார் (Author) Published Date : Jun 28, 2019 17:18 ISTதொழில்நுட்பம்
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஜியோமியின் துணை பிராண்டானா ரெட்மி தனது ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட் போன் திறந்த விற்பனையை அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ விலை ரூபாய் 13,999 முதல் 16,999 வரை விற்பனை செய்யப்படுகின்றது. இவ்வகை ஸ்மார்ட்போன் 6 ஜிபி / 128 ஜிபி என்று வெவ்வேறு வகைகளில் கிடைக்கிறது. ஆன்லைன் தளங்களில் பிளிப்கார்ட்டிலும், மி.காமிலும் கிடைக்கின்றது.
ரெட்மி நோட் 7 ப்ரோவின் சலுகைகளில் ஜியோவின் ரூபாய் 198 மற்றும் அதற்கு மேற்பட்ட ப்ரீபெய்ட் டேட்டா ரீசார்ஜுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற அழைப்புகளோடு 1,120 ஜிபி வரை டேட்டாவை பெறுவார்கள். மேலும் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளையும் பெறுவார்கள்.
ரெட்மி நோட் 7 ப்ரோ குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 செயலியுடன், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பையும் கொண்டுள்ளது. இது ஜியோமியின் எம்ஐயூஐ 10 தனிபயன் ரோம் உடன் ஆண்ட்ராய்டு பை 9 மூலம் இயக்குகிறது. 4,000mAh பேட்டரி கொண்டுள்ளது. ரெட்மி நோட் 7 ப்ரோ 6.3 அங்குல முழு எச்டி மற்றும் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. டிஸ்ப்ளே 1080x2340 என்ற மற்றும் 19.5: 9 என்ற விகிதத்துடன் வருகிறது. டாட் டிஸ்ப்ளே உச்சநிலையில் 13எம்பி செல்பி சென்சார் அமைந்துள்ளது.
இணைப்பு விருப்பங்களில் 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், அகச்சிவப்பு போர்ட் மற்றும் யூ.எஸ்.பி வகை-சி போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, 48 எம்பி முதன்மை சென்சாரும், 5 எம்பி இரண்டாவது சென்சாரையும் கொண்டுள்ளது. ரெட்மி நோட் 7-சீரிஸ் ஆரம்பத்தில் நோட் 7 மற்றும் நோட் 7 புரோவையும் உள்ளடக்கியிருந்தது. ஆனால் நோட் 7 ரெட்மி நோட் 7௭ஸ் என மாற்றப்பட்டது.