தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் யூடியூபை பார்த்து கள்ள நோட்டு அடித்த கும்பல்
வேலு சாமி (Author) Published Date : Sep 24, 2018 16:41 ISTதொழில்நுட்பம்
கூகுளின் பிரபல பொழுதுபோக்கு செயலியான யூடியூப், சிறியவர்கள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் உபயோகப்படும் விதமாக செயல்பட்டு வருகிறது. யூடியூப்பில் எவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதனை வைத்து குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கவே ஏராளாமானோர் முயன்று வருகின்றனர். தற்போது யூடியூப் விடியோவை பார்த்து கள்ள நோட்டு அடித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல், பள்ளிபாளையத்தில் உள்ள பாப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார், இவர் பிளாஸ்டிக் பைப் தயாரிக்கும் நிறுவனம் துவங்கி பெரும் நஷ்டம் அடைந்ததால் கடன் சுமையும் அதிகமாகியுள்ளது. அதே பகுதியில் பேக்கரி நடத்தி வரும் அவருடைய நண்பர் நாகூர் பானு என்பவர் தான் கள்ள நோட்டு அடிக்கும் யோசனையை கூறியுள்ளார். இதனால் தன்னுடைய கடனை அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் சுகுமாரும் இயந்திரங்களை வாங்கி அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த இயந்திரங்களை செயல்படுத்தும் திறன் இல்லாததால் 22வயதான சக்தி என்பவரை கூட்டு சேர்த்துள்ளார். இவர் கள்ளநோட்டு அடிப்பதால் தனக்கு பிரச்சனையிலே தவித்து வந்துள்ளார். பின்னர் சக்தி, போலீசிடம் தகவல் தெரிவிக்க போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை மடக்கி பிடித்துள்ளனர். இந்த சம்பவம் சரியாக, சுகுமார் தனது கடனை அடைக்கும் தருவாயில் நேர்ந்துள்ளது. இந்த கள்ளநோட்டு கும்பல் எவ்வளவு கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்டுள்ளனர் என்பது குறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.