ads
அடுத்த 48மணிநேரத்திற்கு உலகம் முழுவதும் இன்டர்நெட் சேவை பாதிப்பு
வேலு சாமி (Author) Published Date : Oct 12, 2018 18:13 ISTதொழில்நுட்பம்
உலகம் முழுவதும் இன்டர்நெட் பயன்படுத்தி வரும் சில பயனாளர்களுக்கு டொமைன் சர்வரின் பராமரிப்பு பணி காரணமாக இன்டர்நெட் சேவையில் பாதிப்பு ஏற்படலாம் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ரஷியா டுடே என்ற செய்தித்தாள் அறிக்கையில் முக்கிய டொமைன் சர்வர் மற்றும் அதனை சார்ந்துள்ள டொமைன் சர்வர்களால் இன்டர்நெட் சேவை பாதிப்படையும் என்று தெரிவித்துள்ளது.
இந்த பராமரிப்பு பணியினை ஐகேன் (ICANN - Internet Corporation of Assigned Names and Numbers) மேற்கொள்கிறது. பராமரிப்பு பணி நடைபெறும் போது க்ரிப்டோகிராபிக் கீ (cryptographic key) மாற்றப்படுகிறது. இதன் மூலம் இன்டெர்நெட் விவரங்கள் அல்லது டிஎன்எஸ் (Domain Name System (DNS)) பாதுகாக்கப்படும். இதனை செய்வதன் மூலம் சைபர் அட்டாக் நடைபெறுவதை தடுக்க முடியும் என்று ஐகேன் தெரிவித்துள்ளது.
இதனால் அசம்பாவிதம் நடைபெறுமோ என்று உலகம் முழுவதுமுள்ள இன்டர்நெட் பயனாளர்கள் அச்சத்தில் உள்ளனர். சைபர் அட்டாக்கை தடுப்பதற்காக எடுக்கப்படும் இந்த முயற்சியில் ஹேக்கர்கள் நுழையவும் வாய்ப்புள்ளது என்று வினவி வருகின்றனர். இந்த பராமரிப்பு பணியினால் அடுத்த 48 மணிநேரத்திற்கு இன்டர்நெட் வேகம் குறையலாம், இணையதள பக்கங்களை அணுக முடியாத சூழ்நிலை ஏற்படலாம். இதனால் பயனாளர்கள் பணப்பரிவர்த்தனை போன்றவற்றை செய்யாமல் இருக்கவும் தயாராக இருக்கும்படியும் ஐகேன் தெரிவித்துள்ளது.