ads

வீட்டு உணவுகளை சுவைக்க ஸ்விக்கி நிறுவனம் புதிய பயன்பாட்டை தொடங்கியுள்ளது

ஸ்விக்கி டெய்லி பயன்பாடு

ஸ்விக்கி டெய்லி பயன்பாடு

உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி புதிதாக ஒரு பயன்பாட்டை உருவாக்கி உள்ளது. ஸ்விக்கி டெய்லி (swiggy daily) என்னும் பயன்பாடு பிரத்தேகமாக வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளில் வாடிக்கையாளர்களிடம் விநியோகம் செய்ய உருவாக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருப்பவர்கள் மூலம்  தயாரிக்கப்பட்ட அன்றாட உணவுகளை விநியோகிக்க டிபன் சேவை வழங்குநர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட விற்பனையாளர்களால் தொடங்கப்பட்டது இந்த சேவை. 

ஸ்விக்கி டெய்லி பயனர்கள், தங்கள் உணவுகளை முன்பே பதிவு செய்து கொள்ளலாம் அல்லது வார, மாத அல்லது வருடாந்திர சந்தாக்கள் மூலம் உணவுகளை பெற்று கொள்ளலாம் என ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. வளர்ச்சியைப் பற்றி கருத்து தெரிவித்த ஸ்விக்கி தலைமை அதிகாரி ஸ்ரீஹர்ஷா மஜெட்டி, ஒழுங்கமைக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் வீட்டு சமையல் செய்பவர்களின்  கலவையான ஸ்விக்கி டெய்லி வீட்டு உணவுகளை சாப்பிட விருப்பம் கொண்டவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் விதமாகவும், நீண்ட நாட்களுக்கு சாப்பாடு தேவையை மலிவு விலையில் வழங்குவதற்க்காகவும் இந்த சேவை தொடங்கப்பட்டது என தெரிவித்தார்.

 சுத்தமான எளிய உணவுகளை வழங்குவதாக உறுதி ஏற்று தினமும் இதனை வாடிக்கையாளர்களிடம் கடைபிடிக்கின்றனர். மேலும் வீட்டில் சமைப்பவர்களின் மட்டும் செய்யும் இடங்களை முழுமையாக ஆராய்ந்து மேலும் தரம், சுத்தம் மற்றும் சுவையை ஆராய்ந்து பிறகு பயன்பாட்டில் சேர்க்கப்படுகின்றது. பஞ்சாபி, பெங்காலி, தமிழ், ராஜஸ்தானி மற்றும் முகலாய உணவு வகைகளை கிடைக்கும். மேலும் பல வகைகளை சேர்க்க உள்ளனர்.

சந்தாக்களை தற்காலிகமாக திருத்தி வைத்து மீண்டும் தொடங்கும் வசதியையும் பயன்பாட்டில் உள்ளடக்கியுள்ளார். ஒரு வகை உணவு பிடிக்க வில்லை என்றால் இன்னொரு வகையை தேர்தெடுத்து மாற்றிக்கொள்ளலாம். எப்பொழுது வேண்டுமானாலும் பதிவை ரத்து செய்து கொள்ளலாம். இரண்டு மணி நேரத்திற்கு முன்பே நமது உணவுகளை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறான இப்பயன்பாட்டின் சிறப்பு அம்சங்களை பட்டியலிட்டு உள்ளனர். 

முதலில் இச்சேவை குருகிராமத்தில் தொடங்கப்பட்டது. வரும் மாதங்களில் பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்விக்கி சேவையானது ஒரு லட்ச உணவாக பங்குதாரர்களுடன் 175 நகரங்களில் வலம் வருகின்றது.

வீட்டு உணவுகளை சுவைக்க ஸ்விக்கி நிறுவனம் புதிய பயன்பாட்டை தொடங்கியுள்ளது