ads
விண்வெளி ஆய்வில் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நாசா
புருசோத்தமன் (Author) Published Date : Oct 03, 2018 18:06 ISTதொழில்நுட்பம்
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த 1958ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இந்த 60 ஆண்டுகளில் இதுவரை 833 செயற்கைகோள்களை நாசா அனுப்பியுள்ளது. இதன் மூலமாக வான்வெளி மண்டலத்தில் உள்ள ஏராளமான கிரகங்களை கண்டுபிடித்து பல அரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாசா அனுப்பிய 'Parker Solar Probe' விண்கலம் நாசாவின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும். சூரியனை தொட்டு ஆய்வு செய்யக்கூடிய அளவில் வலிமையான விண்கலத்தை நாசா அனுப்பி சாதனை படைத்துள்ளது. இதன் பிறகு அடுத்ததாக நிலவிற்கு சென்று ஆய்வு செய்யக்கூடிய திட்டத்தினையும் கையில் எடுத்துள்ளது. இதற்கு 'Nine Manned Missions' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்திற்கும் முதன் முறையாக மனிதர்களை அனுப்ப முடிவு செய்துள்ளது.
இது வரை விண்கலங்களை அனுப்பி செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த நாசா, தற்போது நேரடியாக மனிதர்களை அனுப்பி செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய உள்ளது. நாசா அனுப்பிய செயற்கைகோள்களில் சில செயற்கை கொள் தோல்வியில் முடிந்தாலும் தொடர்ந்து தனது முயற்சியினால் சூரியனை ஆய்வு செய்யும் அளவிற்கு தொடர்ந்து தனது தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகிறது.