ads
வேற்றுகிரக வாசிகளை கண்டுபிடிக்க பெரிய தொலைநோக்கியை உருவாக்கும் நாசா
வேலு சாமி (Author) Published Date : Sep 13, 2018 15:20 ISTதொழில்நுட்பம்
வேற்றுகிரக வாசிகள் எனப்படும் ஏலியன்ஸ் உண்மையாக இருக்கிறார்களா, வேறு ஏதேனும் கோள்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா போன்ற பல கேள்விகளுக்கு பதிலை தேடி ஏராளமான ஆய்வாளர்கள் தொடர்ந்து நீண்ட வருடங்களாக ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் இன்று வரையிலும் இது போன்ற கேள்விகள் வதந்திகளாகவே இருக்கின்றன. ஆனாலும் சமூக வலைத்தளங்களால் யூடியூப், பேஸ்புக் போன்ற பல தளங்களில் ஏலியன் குறித்த லட்சக்கணக்கான விடியோக்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன.
இதனால் ஏலியன் குறித்த ஆர்வங்கள் மக்களுக்கு தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்த விடீயோக்களில் வருபவை உண்மையா பொய்யா என்பதும் தெரியவில்லை. இது வரையிலும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பில்லியன் கணக்கான கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்டும் வருகிறது. தற்போது வதந்தியாக பார்க்கப்படும் ஏலியன்ஸ் குறித்த கேள்விகளுக்கெல்லாம் விடை தீர்க்க அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா மிகப்பெரிய தொலைநோக்கியை உருவாக்க உள்ளது.
இதனை கொண்டு புறக்கோள்களில் வேறு ஏதேனும் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை கண்டறியலாம். இந்த திட்டத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளும் தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றன. இந்த திட்டத்திற்கான நிதியுதவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தினை இன்னும் 20 ஆண்டுகளுக்குள் முடிக்க மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். புறக்கோள்கள் மற்றும் வேற்றுகிரக வாசிகளை கண்டறிய ஏற்கனவே பலதரப்பட்ட நிபுணர்கள் செயல்பட்டு வந்தாலும் நாசாவின் இந்த வித்தியாசமான முயற்சி நிச்சயம் கைகொடுக்கும் என வானியல் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.