ads
தமிழில் பாடல் மூலம் விமர்சத்தவருக்கு மற்றொரு தமிழ் பாடலில் பதிலளித்த மொஸில்லா
புருசோத்தமன் (Author) Published Date : Sep 26, 2018 18:15 ISTதொழில்நுட்பம்
கூகுள் குரோமிற்கு முன்னதாகவே 2002இல் அறிமுகப்படுத்தப்பட்ட வெப் புரவுஸரில் ஒன்று மொஸில்லா பயர்பாக்ஸ் (Mozilla Firefox). ஆண்டிராய்டு, iOS மற்றும் விண்டோஸ் போன்ற இயங்கு தளங்களில் உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் இந்த செயலியானது 90 மொழிகளில் கிடைக்கிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள லேட்டஸ்ட் வர்சனானது முந்தைய வர்சனை விட இரண்டு மடங்கு வேகமாக செயல்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது மொசில்லாவை ரொம்பவே விரும்பக்கூடிய தமிழ்ப்பறவை என்ற நபர் 'மொசில்லா உண்மை காதலே' என்ற பழைய எம்ஜிஆர் பாடல் மீம்ஸை உருவாக்கு பதிவிட்டிருந்தார். இந்த டிவிட்டர் பதிவினை மற்றொரு நபர் நேரடியாக மொசில்லாவிற்கு அனுப்ப மொசில்லாவும் அவருக்கு பதிலளிக்க தமிழ் பாடல் மூலமாகவே தெரிவித்துள்ளார். மொசில்லாவின் டிவிட்டரில் "உண்மை காதல் யாதென்றால் தமிழ்ப்பறவையும் பயர்பாக்ஸையும் செல்வேனே" என்று தமிழ் பாடலிலே பதிலளித்துள்ளது.
இது தவிர பயர்பாக்ஸ் செயலி லாபத்திற்காக உருவாக்கப்பட்டது இல்லை, மக்களுக்காக உருவாக்கப்பட்டது. இறுதியாக வெளியான லேட்டஸ்ட் பயர்பாக்ஸ் வர்சனை உபயோகப்படுத்தி இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என்றும் பதிலளித்துள்ளது. இந்த பதிவை வைத்தே, இந்த டிவிட்டர் பதிவை போட்டவன் நம்மள்ல ஒருத்தனா தான் இருக்கும் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.