Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

அன்றாடம் உபயோகிக்கும் டூத் பேஸ்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள்

டூத் பேஸ்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள நிற குறியீடுகளுக்கான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

மனிதர்களுடைய வாழ்க்கையில் அன்றாட உபயோகிக்கும் முக்கியமான பொருட்களுள் ஒன்று டூத் பேஸ்ட் (ToothPaste). பல் துலக்குவதற்காக உபயோகப்படுத்தும் இந்த டூத் பேஸ்ட் பல வகைகளில் கிடைக்கின்றது. முன்னதாக மக்கள், பற்களை துலக்குவதற்கு பற்பொடி மற்றும் வேப்பங் குச்சிகளை அனைவரும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது கிராமங்கள், நகரமாக மாறியதில் இருந்து டூத் பேஸ்ட்டை பயன்படுத்தும் வழக்கம் அதிகமாகிவிட்டது. டூத்பேஸ்ட்டை தயாரிக்கும் தொழிற்சாலைகளும் அதிகமாகி விட்டன.

என்ன தான் டூத் பேஸ்ட்கள் பல வகையாக கிடைத்தாலும் வேப்பங் குச்சிகளில் பல் துலக்கிய பின்பு பற்களுக்கு கிடைக்கும் பலம் இப்போதுள்ள டூத் பேஸ்டுகளில் இருப்பதில்லை. ஜெல் போன்று இருக்கும் டூத் பேஸ்டுகள் பற்களை தூய்மை செய்கிறதே தவிர பற்களை வலிமையாக்குவதில்லை. இந்த டூத் பேஸ்ட்டை பிரஷ் மூலமாக பற்களை துலக்கும் போது நமது வயிற்றுக்குள்ளும் சென்று விடுகிறது. ஏராளமான ரசாயனங்களை கொண்டு உருவான இந்த டூத் பேஸ்ட்கள் நமது உடலுக்குள் சென்று பல வகையான பாதிப்புகளை உண்டாக்குகின்றன. 

இந்த பாதிப்புகள் பெரும்பாலும் சிறு வயது குழந்தைகளுக்கே ஏற்படுகின்றன. பல் துலக்கும் போது டூத் பேஸ்ட் சுவையாக இருப்பதாக உணர்ந்து அதனை விழுங்கி விடுகின்றனர். இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பல் துலக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதனால் டூத் பேஸ்ட்களின் தீமைகளை அறிந்து அதனை பாதுகாப்பாக உபயோகப்படுத்த வேண்டும்.

இப்படி பல வகையாக கிடைக்கும் டூத் பேஸ்ட்களை நீங்கள் வாங்கும் போது அதன் அடிப்பகுதியில் சிவப்பு, பச்சை, நீலம் போன்ற நிறங்கள் காணப்படும். இந்த நிறங்களுக்கு என்ன அர்த்தம் என்பதை அறியாமலே நாம் அன்றாடம் அதனை உபயோகப்படுத்தி வருகிறோம். இந்த நிறங்கள் நமக்கு எதை உணர்த்துகின்றன என்பதை பார்ப்போம்.

உதாரணமாக சென்சோடைன் (SENSODYNE) போன்ற பேஸ்ட்களில் நீல நிற வண்ணம் அடங்கிய குறியீடு கொடுக்கப்பட்டிருக்கும். இதற்கு அர்த்தம், இந்த பேஸ்ட்டில் இயற்கையும், மருத்துவமும் கலந்த டூத் பேஸ்ட் என்பது தான்.

இதன் பிறகு கோல்கெட்டின் வேத்சக்தி (VEDSHAKTHI) வகை டூத் பேஸ்ட்டில் பச்சை நிற குறியீடு கொடுக்கப்பட்டிருக்கும். இந்த டூத் பேஸ்ட்டில் முழுவதும் இயற்கை பொருட்களான கிராம்பு, தேன், வேப்பிலை, நெல்லிக்காய் போன்றவற்றை கொண்டு உருவானது என்பதை குறிக்கும்.

இதே போன்ற கோல்கெட்டின் ஹெர்பல் (HERBAL) போன்ற டூத் பேஸ்ட்டில் சிவப்பு நிற குறியீடு டூத் பேஸ்ட்டில் அடி பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் இயற்கையான பொருட்களுடன், ரசாயனமும் (Chemicals) கலந்துள்ளதை குறிக்கும்.

இதன் பிறகு விகோ (VICCO) போன்ற டூத் பேஸ்ட்டில் கருப்பு நிற வண்ணம் கொடுக்கப்பட்டிருக்கும். இதற்கு, முழுக்க முழுக்க ரசாயன பொருட்களை கொண்டு உருவானதை குறிக்கும்.

மேலும் டூத் பேஸ்ட்டில் மட்டுமல்லாமல் பல வகையான உணவு பொருட்களிலும் பச்சை நிற புள்ளி (DOT) குறியீடு கொடுக்கப்பட்டிருக்கும். இதற்கான அர்த்தம், இந்த பொருள் முழுவதும் காய்கறிகளால் உருவாக்கப்பட்டதை குறிக்கும். 

சைவதிற்கு மட்டுமல்லாமல் அசைவ பொருட்கள் குறியீடு உள்ளது. அசைவ பொருட்களுக்கு சிவப்பு நிற புள்ளி குறியீடு கொடுக்கப்பட்டிருக்கும். இது போன்று நாம் அன்றாடம் உபயோகிக்கும் பல வகையான பொருட்களில் குறியீடுகள் எச்சரிப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது போன்று குறியீடுகள் பெரும்பாலான மக்கள் படிப்பறிவு இல்லாமல் இருப்பதாலும், அவசர நேரத்திலும் தவிர்த்து வருகின்றனர். இது போன்ற மிகவும் அவசியமான குறியீடுகளை பற்றி அறிந்திருந்தால் மற்றவர்களுக்கும், அறிய செய்யுங்கள். அறியாமல் இருந்தால் தயவு செய்து அறிந்து கொள்ளுங்கள்.

அன்றாடம் உபயோகிக்கும் டூத் பேஸ்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள்