ads

கிரிக்கெட் ரசிகர்களுக்கு எல்லையற்ற சேவை: ஜியோ நிறுவனம்

ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோடிவியின் சேவை

ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோடிவியின் சேவை

ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ டிவியில் இலவசமாக மற்றும் நேரடியாக உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண இந்திய தொலை தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு இலவச சேவைகளை வழங்கி வருகின்றது.

ஹாட்ஸ்டாரைப் பயன்படுத்தும் ​அனைத்து ஜியோ பயனர்களும் அனைத்து உலகக் கோப்பை போட்டிகளையும் பார்க்க இயலும். ஜியோ டிவி பயனர்கள் போட்டியை காண  ஹாட்ஸ்டாருக்கு  திசைதிருப்ப செய்கின்றனர் ஹாட்ஸ்டார் நிருவஙரகள். இனி ஹாட்ஸ்டார் மூலம் போட்டிகளை இலவசமாக பார்த்து கொள்ளலாம்.

ஜியோவின் கருத்தின்படி, 300 மில்லியனுக்கும் அதிகமான ஜியோ பயனர்கள் இந்த வாய்ப்பின் மூலம் நன்மை அடைகின்றனர். உலகக் கோப்பை போட்டிகளை பார்ப்பதற்கு பயனர்கள் 365 ரூபாய் பணம் செலுத்த  வேண்டியிருக்கும். ஆனால் ஜியோவின் இந்த சலுகையால் கட்டணத்திற்கு செலுத்த வேண்டிய பணம் சேமிக்கப்படுகின்றது.

மேலும், ஜியோ கிரிக்கெட் பிளே அலோங் (Jiocricket play along) என்ற விளையாட்டு பயன்பாட்டை தொடங்கியுள்ளது. உலக கோப்பை விளையாட்டில் ஈடுபடுத்துவது மட்டும் அல்லாது நடக்கும் போட்டியின் ஸ்கோர் விவரமும், போட்டி அட்டவனைகளும், போட்டி முடிவுகள் என போட்டி சம்மந்தப்பட்ட அனைத்து தகவல்களும் ஒரே பயன்பாட்டின் கீழ் வருகின்றன. ஜியோ பயனாளராக இல்லா விட்டாலும் இந்த விளையாட்டு பயன்பாட்டை உபயோகிக்க இயலும்.

ஜியோ நிறுவனம் ரூபாய் 251 கான டேட்டா சேவையை பயன்படுத்த பரிந்துரை செய்கின்றது. 51 நாட்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகின்றது. ஐபிஎல் தொடரின் போதே இச்சேவையை தொடங்கி விட்டது ஜியோ நிறுவனம். 

கிரிக்கெட் ரசிகர்களுக்கு எல்லையற்ற சேவை: ஜியோ நிறுவனம்