ads
நான்கு ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தை முழுமையாக சுற்றியுள்ள மங்கள்யான்
புருசோத்தமன் (Author) Published Date : Sep 28, 2018 15:00 ISTதொழில்நுட்பம்
சூரிய குடும்பத்தில் நான்காவது கோளும், இரண்டாவது சிறிய கோளுமான செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் பணிகளை விண்வெளி ஆய்வாளர்கள் நீண்ட வருடமாக செயற்கைகோள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும், செவ்வாய் கிரகத்தை ஆய்வதற்காக மங்கள்யான் திட்டத்தை செயல்படுத்தியது.
இதனால் கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 24இல் செவ்வாய் கிரகத்தை சுற்றி வருவதற்காக மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக தனது சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. இந்த விண்கலம் அனுப்பப்பட்ட நான்கு ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தை தற்போது முழுமையாக சுற்றியுள்ளது. செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் இந்த திட்டத்தின் (MOM - Mars Orbiter Mission) ஆய்வு காலம் ஆறு மாதமாக மட்டுமே இருந்தது.
ஆனால் நான்கு ஆண்டுகளாக தாக்கு பிடித்து தொடர்ந்து ஆய்வாளர்களுக்கு தகவல்களை அனுப்பி கொண்டே இருந்தது. இது வரையில் மார்ஸ் கலர் கேமிரா மூலம் செவ்வாய் கிரகத்தின் 980க்கும் மேற்பட்ட புகைப்படங்களை அனுப்பியுள்ளது. விண்ணில் ஏற்படும் கோளாறுகளை தாமாகவே சரி செய்து கொள்ளும் அம்சம் கொண்டதாக இந்த மங்கள்யான் செயற்கைகோள் உருவாக்கப்பட்டது.
இதனால் இடையில் செயற்கைகோளின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட போதிலும் தாமாகவே சரிசெய்து கொண்டு மீண்டும் தகவலை தர தயாரானது. தற்போது இந்த மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை முழுமையாக சுற்றியுள்ளதால் செவ்வாய் கிரகத்தின் 'ATLAS' வரைபடமும் முழுமையாக உருவாகி விட்டது. இதற்கான தகவலை இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.