இங்கிலாந்தின் இரண்டு செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ
வேலு சாமி (Author) Published Date : Sep 17, 2018 17:51 ISTதொழில்நுட்பம்
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட் 1993ஆம் ஆண்டு முதல் தனது பயணத்தை தொடங்கியது. தொடர்ந்து 25 ஆண்டுகளாக இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் உலக நாடுகளிடையே நல்ல முன்னேற்றம் கண்டுவருகிறது. இதுவரை மொத்தமாக பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 257 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
இதில் 48 இந்திய செயற்கைகோள்களும் அடங்கும். இதன் பிறகு இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட இரண்டு செயற்கைகோள்கள் நேற்று இரவு சரியாக 10:08 மணிக்கு ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி C42 ராக்கெட் மூலம் பாயவுள்ளது. இந்த இரண்டு செயற்கைக்கோளையும் கடல்வழி போக்குவரத்து, பேரிடர் கண்காணிப்பு, சுற்றுசூழல் கண்காணிப்பு போன்ற பல நோக்கங்களுக்காக இங்கிலாந்து உருவாக்கியுள்ளது.
மொத்தமாக இரண்டு செயற்கைக்கோளுமே 889 கிலோ எடை கொண்டது. இந்த இரண்டு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்டவுன் சனிக்கிழமை சரியாக 1:08 மணிக்கு துவங்கியது. கவுன்டவுன் துவங்கப்பட்ட 32 மணிநேரம் 37 நிமிடம் கழித்து நேற்று இரவு 10:08 மணிக்கு இரண்டு செயற்கைகோள்களை விண்ணில் பாயவுள்ளது.