அரசு இணைய தலங்களையும் விட்டுவைக்காத ஹேக்கர்கள்
புருசோத்தமன் (Author) Published Date : Sep 19, 2018 18:05 ISTதொழில்நுட்பம்
ஹேக்கிங் என்பது இன்டர்நெட் மூலமாக மற்றவர்கள் இணைய தளங்களை முடக்கி குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முறையாகும். நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்பட்டு வரும் செல்போன், கணினி மூலம் மட்டுமே இந்த ஹேக்கிங் நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள நவீன உலகில் இன்டர்நெட் மட்டுமே பணத்தை ஈட்டி தருகிறது. இதனால் இன்டர்நெட் மூலம் நடைபெறும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.
என்னதான் புது புது பாதுகாப்பு அம்சங்கள் பயன்படுத்தி இணையதளங்களை பாதுகாத்தாலும் ஹேக்கர்களும் அதற்கென தனியாக ஒரு ஸ்க்ரிப்டை உருவாக்கி ஹேக்கிங் செய்து விடுகின்றனர். இதனால் இணையதளங்கள் பாதுகாப்பில்லாமல் உள்ளது. இது தற்போது அரசு தலங்களுக்கும் பொருந்தும். திருப்பதியில் உள்ள மச்சேர்லா நகரத்தை சேர்ந்த அரசு வலைத்தளங்கள் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
அரசு தளங்களை ஹேக்கிங் செய்து அதனை வைத்து க்ரிப்டோகரன்சிக்களை மைனிங் செய்ய பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது அதிகமாக மோனெரோ (Monero) எனப்படும் க்ரிப்டோகரன்சியை மைனிங் செய்வதற்காக அரசு வலைத்தளங்களை ஹேக்கிங் செய்துள்ளனர். இந்த மோனெரோ (Monero) க்ரிப்டோகரன்சியை டிராக் செய்வது மிகவும் கடினம் என்பதால் ஹேக்கர்கள் இதனை தேர்வு செய்துள்ளனர்.
ஏற்கனவே மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத் பயன்படுத்தி வந்த தளத்தை இதே க்ரிப்டோகரன்சிக்காக ஹேக்கிங் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பிறகு திருப்பதியில் இது போன்று சம்பவம் நடைபெற்றுள்ளது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஹேக்கர்கள் டிராக்கிங் செய்ய முடியாத தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹேக்கிங் செய்வதால் அவர்களை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக உள்ளது.