ads
இன்பாக்ஸ் செயலியை நிரந்தரமாக நிறுத்த உள்ள கூகுள்
வேலு சாமி (Author) Published Date : Sep 15, 2018 20:19 ISTதொழில்நுட்பம்
கூகுள் நிறுவனத்தின் இன்பாக்ஸ் ஜிமெயில் செயலி கடந்த 2014இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலியானது மின்னஞ்சலுக்கென்றே தனியாக வழங்கப்பட்டது. இந்த செயலி மூலம் அனைத்து மின்னஞ்சல்களும் மிகவும் எளிதாக கையாளும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. வரும் மின்னஞ்சல்களில் உள்ள புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் போன்றவை மின்னஞ்சலை ஓபன் பண்ணாமலே திரையில் காண்பிக்கப்படும்.
இது தவிர ஒரே மாதிரியான மின்னஞ்சல்கள் அனைத்தும் வரிசைப்படுத்தப்பட்டு எளிதாக கையாள வசதியாக இருந்தது. இந்த செயலியை அடுத்த ஆண்டு முதல் நிரந்தரமாக நிறுத்த போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுளின் அறிவிப்பின்படி இன்பாக்ஸ் பை ஜிமெயில் செயலி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படுகிறது. இதற்கு பதிலாக புதிய அப்டேட் செய்யப்பட்ட பல சிறப்பம்சங்கள் கொண்ட ஜிமெயில் செயலி வழங்கப்படுகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட ஜிமெயில் செயலில் செயற்கை நுண்ணறிவு, ஸ்நூஸ் வசதி, நோட்டிபிகேஷன், கேஸ்ட்ச்சுர் (Gesture) போன்ற பல அம்சங்கள் இடம் பெறுகின்றன.