ads
பேடிஎம் செயலி கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அகற்றம்
புருசோத்தமன் (Author) Published Date : Sep 18, 2020 15:52 ISTதொழில்நுட்பம்
கூகுள் நிறுவனம் பேடிஎம் செயலியை பிளே ஸ்டோரிலிருந்து அகற்றியுள்ளது, அதே நேரத்தில் வணிகத்திற்கான பேடிஎம் மால், பேடிஎம் மனி மற்றும் இன்னும் சில பேடிஎம் செயலிகள் பிளே ஸ்டோரிலிருந்து அகற்றப்படவில்லை.
பேடிஎம் நிறுவனம் இது தொடர்பான கருத்து தெரிவிக்க மறுத்து, இந்த விவகாரத்தை விசாரித்த பின்னர் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிடும் என்று கூறியுள்ளது. இதே பேடிஎம் செயலி ஆப்பிள் ஸ்டோரில் அகற்றப்படவில்ல.
பல லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் பேடிஎம் செயலியை அகற்றியதற்கான முழு விவரங்களை கூகுள் வெளியிடவில்லை. ஆனால் தனது வலைப்பதிவில் "சூதாட்டக் கொள்கையை சுட்டிக்காட்டியுள்ளது.".
ஆண்ட்ராய்டு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை ஆகியவற்றின் துணைத் தலைவரான கூகிளின் சுசேன் ஃப்ரே, “நாங்கள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை அனுமதிக்க மாட்டோம், மற்றும் வாடிக்கையாளர்களை சூதாட்டம் மூலம் பண பரிவர்த்தனை, அல்லது ஒரு செயலியில் இருந்து மற்ற சூதாட்ட வலைப்பக்கங்களுக்கு ஊக்கிவைக்கும் எந்த ஒரு செயலியையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம், இது எங்கள் கொள்கைகளை மீறுவதாகும் என்று தெரிவித்துள்ளார்.