ads

Google Payments: கூகுளுக்கு தெரியாமல் எந்த கொள்முதலும் செய்யமுடியாது

கூகுல் payments and subscriptions

கூகுல் payments and subscriptions

Google Payments: கூகிள் அல்லாத வலைதளங்களில் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதால் கூகுல் நமது நடவடிக்கைகளை கண்காணித்து கொண்டிருக்கிறது. அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart), சுவிக்கி (Swiggy) போன்ற கூகுல் அல்லாத ஆன்லைன் வலைதளங்கள் மூலம் வாங்கும் பொருட்களுக்கு ரசீதுகள் ஈமெயிலில் அனுப்பப்படுகிறது. பெரும்பாலானோர் ஜிமெயில் (Gmail) உபயோகிப்பதனால், கூகிள் நமது பணபரிவர்தனைகளை சேமித்து வைத்துக்கொள்கிறது.

கூகுளின் ஒரு பக்கத்தில், 'வாங்குதல்கள்' (Google Payments and Subscriptions) என்றழைக்கப்படும் பகுதியில் குறைந்த பட்சம் 2012 ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்தே வாங்கப்பட்ட பெரும்பாலான பொருட்களின் விவரங்கள் பட்டியலிட்டு காண்பிக்கப்படுகிறது.

அறிக்கையின் படி, ஒருவர் பல ஆன்லைன் இணையதளங்கள் மூலம் அல்லது கைபேசியில் உள்ள வர்த்தக செயலிகள் மூலம் செய்யும் கொள்முதல் - கூகுல் மூலமாக ஏதும் வாங்காமல் இருந்தாலும் ரசீதுகள் ஜிமெயில்  உபயோகிப்போர் ஈமெயில் மூலம் அனுப்புவதாலும் மற்றும் கூகுளின் ஆண்ட்ராய்டு மொபைல் உபயோகிப்பதாலும், கூகுல் நமது நடவடிக்கைகளை சுலபமாக கண்காணிக்கின்றது.

நாம் பொருட்கள் வாங்கிய பட்டியலை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் https://myaccount.google.com/purchases என்ற தளத்தில் சென்று பட்டியலை பார்த்து கொள்ளலாம். மெயில் மூலம் வரும் ரசீதுகள் விவரங்கள் மட்டுமே காணப்படும். இந்த தளம் தனியார் இலக்கு கொண்டு உருவாக்கப்பட்டதால் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.

Google Payments: கூகுளுக்கு தெரியாமல் எந்த கொள்முதலும் செய்யமுடியாது

மேலும் இத்தளத்தில் சென்று பட்டியலை ஒவ்வொன்றாக தேர்வு செய்து அழிக்க வேண்டும். இது சற்று கடுமையான வேலையாக இருப்பதால் மெயிலில் உள்ள தகவல்களை அழித்து கொண்டால் தளத்தில் சென்று அழித்தல் சற்று ஆறுதல் அளிக்கும்.

Google Payments and subscriptionsGoogle Payments and subscriptions

Google Payments: கூகுளுக்கு தெரியாமல் எந்த கொள்முதலும் செய்யமுடியாது