2020க்குள் தகவல் பரிமாற்ற சேவையை நிறுத்தவுள்ள கூகுள்
வேலு சாமி (Author) Published Date : Dec 04, 2018 18:39 ISTதொழில்நுட்பம்
கூகுள் நிறுவனத்தின் ஆன்லைன் செயலிகளுள் ஒன்றான கூகுள் ஹேங்அவுட்ஸ் (Google Hangouts) செயலி, வரும் 2020ஆம் ஆண்டிற்குள் நிறுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகின்றன. கூகுள் நிறுவனம், வாடிக்கையாளர்கள் தகவல்களை புகைப்படம், வீடியோ மற்றும் எழுத்து மூலம் பரிமாறிக்கொள்வதற்காக 5 வருடங்களுக்கு முன்பு 2013இல் கூகுள் ஹேங்அவுட்ஸ் (Google Hangouts) செயலியை அறிமுகப்படுத்தியது.
இந்த செயலியானது குறிப்பாக விண்டோஸ் பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. விண்டோஸ் பயனாளர்களை விட ஆண்டிராய்டு மற்றும் iOS பயனாளர்கள் எண்ணிக்கை சற்று குறைவாகவே இருந்தாலும் தொடர்ந்து வாடிக்கையாளர்களை கவர புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இந்த செயலி 2020இல் இருந்து நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி வந்தது. இந்த தகவலை கூகுள் நிறுவன ஊழியர் ஒருவர் மறுத்துள்ளார். கூகுள் ஹேங்அவுட்ஸ் (Google Hangouts) நிறுத்தப்படவில்லை, புது புது சிறப்பம்சங்களை இணைத்து 'Upgrade' செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.