ads

நோயாளியின் இறப்பை துல்லியமாக கணக்கிடும் கூகுளின் புதிய தொழில்நுட்பம்

ஒரு நோயாளியின் இறக்கும் தேதியை துல்லியமாக அறிய கூகுள் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரு நோயாளியின் இறக்கும் தேதியை துல்லியமாக அறிய கூகுள் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரு மனிதன் பிறக்கும் போது எவ்வளவு அவதிப்படுகிறானோ அதை விட பல மடங்கு இறப்பதற்கு அவதிப்படுகிறான். இந்த வாழ்க்கையில் குழந்தை பருவம், பள்ளி பருவம், இளமை பருவம், முதுமை பருவம் போன்ற அனைத்திலும் இன்பம் துன்பம் இரண்டையும் அனுபவித்து இறுதியாக எதற்காக பிறந்தோம் எதற்காக இருக்கிறோம் என்பதை அறியாமலே இறந்து விடுகிறான். இறக்கும் போது மரணத்தை தள்ளி போடுவதற்காக மருத்துவ துறையில் எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் அது தற்காலிகமாகவே உள்ளது.

இத்தனை தொழில்நுட்பங்களை கொண்டு ஒரு மனிதன் இறப்பை சாதாரணமாக கணித்து விட முடியாது. மருத்துவர்கள் நோயாளியின் இறப்பை கணக்கிட்டு வயதை தேதியை கணித்தால் அது ஏனோ தவறுதலாக போய் விடுகிறது. அது ஏன் என்ற கேள்விக்கும் இதுவரை விடை தெரியவில்லை. ஆனால் கூகுள் நிறுவனம் நோயாளியின் இறப்பு தேதியை சரியாக கணக்கிட புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் சோதனை முயற்சியிலும் வெற்றி கண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு மருத்துவமனையில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பெண் இறப்பதற்கு 9.3 சதவீதம் இறப்பதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கணித்திருந்தனர். ஆனால் அந்த பெண்ணின் உடல்நிலையை கூகுள் AI தொழில்நுட்பம் மருத்துவ தரவுத்தளத்தில் குறைந்த நேரத்தில் ஆராய்ந்து அவர் இறப்பதற்கு 19.9 சதவீதம் வாய்ப்புள்ளதாக துல்லியமாக கணித்திருந்தது. இதன் கணிப்பின்படி அந்த பெண்ணும் குறிப்பிட்ட சில தினங்களுக்குள் இறந்து விட்டார். இந்த சோதனை முயற்சி வெற்றி அடைந்த நிலையில் இந்த தொழில்நுட்பத்தை மருத்துவ துறையில் அமல்படுத்த தீவிர தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த தொழில்நுட்பம் மருத்துவ துறைக்கு மிகவும் உதவியானதாக இருக்கும். இது தவிர இந்த தொழில்நுட்பத்தை வைத்து ஒரு நோயாளியின் மருத்துவ வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள முடியுமாம்.

நோயாளியின் இறப்பை துல்லியமாக கணக்கிடும் கூகுளின் புதிய தொழில்நுட்பம்