கூகுள் தேடலில் அடுத்ததாக வரவுள்ள முக்கியமான அப்டேட்கள்
வேலு சாமி (Author) Published Date : Sep 26, 2018 09:59 ISTதொழில்நுட்பம்
கூகுள் தேடல், கூகுள் நிறுவனத்தின் முக்கிய சிறப்பம்சங்களுள் ஒன்று. வாடிக்கையாளர் எண்ணத்தை வார்த்தையாக தேடும் போது அவருடைய தேடலுக்கேற்ப சரியான முடிவுகளை கொண்டு வருகிறது கூகுள் தேடல். பயனாளர்களை கவர புதுப்புது அப்டேட்கள் வழங்கி வந்தாலும் அதன் பின்னணியில் செயல்படுவது 'தேடல்'. இந்த தேடல் முடிவுகளை பயனாளருக்கு புது அனுபவத்தையும், எளிதாக இருக்கும் வகையிலும் அடுத்த அப்டேட்களை வழங்க கூகுள் முடிவு செய்துள்ளது.
இந்த அப்டேட்களுக்கான அறிவிப்பினை கூகுளின் 20ஆம் ஆண்டு, ஆண்டு விழாவில் தெரிவித்தது. இந்த அப்டேட்கள் மூலம் வழக்கமான தேடல் முடிவுகளை, புது அம்சங்களுடன் காண்பிக்கவுள்ளது. இதன் மூலம் தேடும் வார்த்தைக்கான செய்திகள், புகைப்படங்கள், விடியோக்கள் மற்றும் கதைகளை புதுவிதமாக காண்பிக்கவுள்ளனர்.
1. இந்த அப்டேட்டில் கூகுளின் 'personalized feed' அம்சம், குறிப்பாக மொபைல் பயனாளர்களுக்கு முதல் பக்கத்திலே தெரியும். இதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தைக்கான அனைத்து தகவல்களும் உங்களுடைய தேடல் வரலாற்றை (Search History) பொறுத்து காண்பிக்கும். இதனை 'collection' ஆக பதிவு செய்து கொள்ளலாம்.
2. நீங்கள் தேடும் வார்த்தைக்கான கதைகளும் (Stories) தேடல் முடிவில் காண்பிக்கப்படும். கூகுள் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்துவதால் உங்கள் தேடலுக்கான கதைகள் முழுவதும் எளிதாக காண்பிக்கும்.
3. இந்த அப்டேட்களில் புகைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கூகுள் தேடலில் உள்ள புகைப்படங்களுக்காகவே தரவரிசை அல்காரிதம் (Ranking Algorithm) உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் உங்களுடைய புகைப்பட தேடலில் கூகுள் பயனாளர்கள் அளித்துள்ள தரவரிசையை பொறுத்து அதிக முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படங்கள் முதல் வரிசையில் காண்பிக்கும். இது தவிர இந்த அப்டேட் மூலம் கூகுள் புகைப்பட பக்கம் பிண்ட்ரஸ்ட் (Pinterest) போன்ற அனுபவத்தை கொடுக்கும்.