ads

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் அதிவேக இன்டர்நெட் இலவசமாக

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

தொலைத் தொடர்புத் துறையில் ஜியோ தனது கால்தடங்களை வெற்றிகரமாக நிறுவியதற்கு பிறகு, அடுத்த கட்டமாக ஜியோ நிறுவனம், ஜியோஃபைபர் தொழில் நுட்பத்துடன் பிராட்பேண்ட் தொழிற்துறையை குலுக்க தயாராக உள்ளது. வரவிருக்கும் சேவையைப் பற்றி அனைவரும் ஏதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஜியோவின் வணிக வர்த்தகத்தது எவ்வாறு துவங்கியதோ அதே பாணியில் ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவையைத் தொடங்க ஜியோ தயராகிவருகிறது.

2016 ஆம் ஆண்டு தொலைதொடர்பு துறையில் விலை சந்தாக்கள் மூலம் பல ஏதிர்பார்ப்புகளை உருவாக்கியது. ஜிகாபைபர் பிராட்பேண்ட் தொழிற்துறையிலும் ஒரு அதிர்ச்சியை உருவாக்கம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிகாபைபர் அதிவேக இன்டர்நெட் சேவைக்காக தொடங்கப்பட்டது.

வேக அளவு 100mbps முதல் 1Gbps வரை ஃபைபர் சார்ந்த பிராட்பேண்ட் சேவையை வீடுகள், கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு ஜிகாபைபர் அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்குகின்றது. வர்த்தக ரீதியாக ஜியோ நிறுவனம் ஜிகாபைபர் கொண்டு முன்னோட்டத்தை நடத்தியது. வர்த்தக ரீதியாக சேவையை தொடங்குவதற்கு முன் பீட்டா சேவையை வழங்கி முன்னோட்டம் கண்டுள்ளது. இச்சேவை தற்போதைக்கு இலவசமாக எந்த வித கட்டணமும் இன்றி வழங்கி வருகிறது. எனினும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு தொகையாக ரூபாய் 4500 திசைவிக்கு செலுத்த வேண்டும்.

முன்னோட்டம் வழங்கலின் கீழ், வாடிக்கையாளர்கள் 100Mbps வேகத்தில் மாதத்திற்கு 100GB டேட்ட பயன்படுத்த இயலும். மேலும் தரவு தேவைப்பட்டால், தரவுக் நீட்டிக்க தரவுக் கூப்பன்கள் கிடைக்கின்றன. எவ்வித கட்டண அட்டவனைகள் நிர்ணைக்காத நிலையில் கூடுதலாக 1000 GB வழங்கப்படும் என்றும் 40 GB ஆக பிரித்து ரெடிம் கூப்பன்களில் வழங்கப்படும் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் ஊடக அறிக்கை அம்பானி கூறியது, ஜிகாபைபர் மீதான சோதனை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று உறுதி செய்தார். வீட்டிற்கான பிராட்பேண்ட், பொழுதுபோக்கு, வயர்லைன் மற்றும் நிறுவனங்களை உள்ளடக்கியது இந்த சேவைகள் உள்ளடங்கும். ஜிகாபைபர் மூன்று சேவைகளை வழங்கவிருக்கின்றது. அதில் டிஷ், லேண்ட்லைன், பிராட்பேண்ட் சேவைகளை ஒரே திசைவியில் சேவைகள் வழங்கும்

கிகாஃபைபர் ட்ரிபிள்ப்லே திட்டம்:

  • பெயர் குறிப்பிடுவது போல ஜியோவின் மூன்று வரவிருக்கும் சேவைகளுக்கான சந்தா சேர்க்கையை இத்திட்டம் உள்ளடக்கும். டிடிஎச் மற்றும் லேண்ட்லைன் இணைப்பு ஆகியவையாகும்.
  • ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும் 100 ஜி.பி. இணையம் 100 எம்.பி.பி.எஸ் வேகத்தில் உபயோகிக்கலாம்.
  • அதோடு சந்தாதாரர்கள் ஜியோ ஹோம் டிவி மற்றும் லேண்ட்லைன் ஆகியவற்றுக்கான இலவச இணைப்பையும் பெறுவார்கள்.
  • ஜியோ ஹோம் டி.வி ஜியோவின் டி.டி.எச் இணைப்பை சாடி இருக்கும், இது ஐ.பி.டி.வி தொழில்நுட்பத்தை நம்பியிருக்கும், அதாவது டி.டி.எச் சேவைகளுக்கு பதிலாக டி.வி சேனல்களை அதிவேக இணையம பரிமாற்றம் மூலம் பயன்படுத்தும். இத்திட்டம் 600 சேனல்களை வழங்கும் என்று கூறப்படுகிறது.
  • டிரிபிள் ப்ளே திட்டம் மேலும் 40 ஜி.பி கூப்பன்களின் வீதம் மொத்தம் 1000 ஜி.பி கூடுதல் இணையத்தை வழங்குகிறது.
  • இந்த திட்டத்தின்படி, நுகர்வோர் தங்கள் டிவி, லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் கட்டணங்களை ஒரே கட்டணமாக செலுத்தலாம்.
  • இன்னும் விலை நிர்ணயம் குறித்த தகவல் எதுவும் இல்லை என்றாலும், டிரிபிள் ப்ளே திட்டத்தை ரூ. 600 க்கு பெறலாம் என கூறப்படுகிறது.

ஜியோ ஜிகாஃபைபர்

இப்போது ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்தை முன்பதிவு வசதியின் கீழ் பெற்றுக்கொள்ளலாம். இச்சேவை வணிக பயன்பாட்டிற்கு வரும்வரை இலவசமாக உபயோகிக்கலாம். இந்த சேவை ரூ. 4500 வைப்பு தொகையுடன் இந்த ஆண்டு இறுதியில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் அதிவேக இன்டர்நெட் இலவசமாக