ads

இனி ஸ்மார்ட்போன்களை தொடாமலே இயக்கலாம்

ஸ்மார்ட்போன்களை தொடாமல் இயக்குவதாக ரோபோ விரல் கொண்ட கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களை தொடாமல் இயக்குவதாக ரோபோ விரல் கொண்ட கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதுள்ள மக்களுக்கு ஸ்மார்ட்போன் மிகவும் முக்கியமான தேவையாகி விட்டது. ஸ்மார்ட்போன்களில் இன்டர்நெட் மூலம் பலதரப்பட்ட விஷயங்களை கற்று கொள்கின்றனர். இதனால் ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு கூடுதல் சிறப்பம்சங்களை வழங்க பல நிறுவனங்கள் புது புது கருவிகளை அறிமுகம் செய்து வருகின்றனர்.

இனி ஸ்மார்ட்போன்களை தொடாமலே இயக்கலாம்

Image Credit - Marc Teyssier

தற்போது செல்பி புகைப்படம் எடுப்பதற்கு செல்பி ஸ்டிக், விடியோக்கள் மற்றும் படங்களை காண்பதற்காக VR கேமிரா போன்ற பல கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடம் நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது ஸ்மார்ட்போன்களை கைகளால் உபயோகப்படுத்துவதை தவிர்ப்பதற்காக ரோபோ விரலை பிரான்ஸை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோடிக் விரலை கொண்டுள்ள கருவியை ஸ்மார்ட்போனுடன் இணைத்து கொள்ள வேண்டும்.

பின்பு ஸ்மார்ட்போன்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தவும், மெசேஜ் அல்லது நோட்டிபிகேஷன் வரும்பொழுது நமக்கு தகவலையும் கொடுக்கிறது. மேலும் அசைவுகள் மூலமாகவும் நம்முடன் உரையாடவும் செய்கிறது. பார்ப்பதற்கு ரேகைகள் கொண்ட மனித விரல் போன்றே காட்சியளிப்பதால் ஸ்மார்ட்போன்களை எளிதாக உபயோக படுத்துகிறது. இந்த ரோபோடிக் விரல் மெசேஜ் மற்றும் இமோஜிகளுக்கு ஏற்ப அசைவுகளை வித்தியாசமாக காண்பிக்கிறது. 

இனி ஸ்மார்ட்போன்களை தொடாமலே இயக்கலாம்