ads

வரும் 2028க்குள் இன்டர்நெட் உலகம் இரண்டாக உடையும்

வருகின்ற 2028ஆம் ஆண்டிற்குள் இன்டர்நெட் என்பது இரண்டாக உடையும் என்று முன்னாள் கூகுள் சிஇஓ தெரிவித்துள்ளார்.

வருகின்ற 2028ஆம் ஆண்டிற்குள் இன்டர்நெட் என்பது இரண்டாக உடையும் என்று முன்னாள் கூகுள் சிஇஓ தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள மக்களுக்கு இன்டர்நெட் என்பது சாதாரண விஷயமாக உள்ளது. தொழில்நுட்பம் வளர வளர இன்டர்நெட்டிற்கு மரியாதையே இல்லாமல் போய் விட்டது. அதற்கு காரணம் ஜியோ என்றே சொல்லலாம். ஜியோ வந்ததில் இருந்து நமது மக்களுக்கு ஒவ்வொரு நாளும் GB கணக்கில் இன்டர்நெட் கிடைக்கிறது. இதனை எப்படியாவது தூங்குவதற்குள் தீர்த்து விட வேண்டும் என்று பொழுதுபோக்கிற்காக பல வேலைகளை செய்கின்றனர். உலகம் முழுவதும் இன்டர்நெட் இல்லையெனில் என்னவாகும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

வரும் 2028க்குள் இன்டர்நெட் உலகம் இரண்டாக உடையும்

இந்தியாவில் பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், யூ கம்யூனிகேஷன், பாரதி ஏர்டெல், டாட்டா, சிபி போன்ற பல நிறுவனங்கள் வேகமான இன்டர்நெட் சேவைகளை வழங்கி வருகின்றனர். இப்படி நமது அன்றாட வாழ்வில் பழகி போன ஒன்றான இன்டர்நெட் வரும் 2028ஆம் ஆண்டிற்குள் இரண்டாக உடையும் என்று முன்னாள் கூகுள் சிஇஓ எரிக் என்பவர் தெரிவித்துள்ளார்.

வரும் 2028க்குள் இன்டர்நெட் உலகம் இரண்டாக உடையும்

இவருடைய தகவல்படி இன்டர்நெட் என்பது 2028க்குள் இரண்டாக உடையும். ஒரு பகுதி  சீன நிறுவனங்களும், மறு பகுதி அமெரிக்க நிறுவனங்களும் ஆட்சி செய்யும். இன்டர்நெட் என்பது ஒவ்வொரு நாளுமே அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. வரும் 2028ஆம் ஆண்டிற்குள் இன்டர்நெட் இரண்டாக மாறும்போது உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வரும் 2028க்குள் இன்டர்நெட் உலகம் இரண்டாக உடையும்