ads

கூகுள் குரோமில் அறிமுகப்படுத்தப்பட்ட கைரேகை சென்சார்

பல இயங்கு தளங்களில் ஒரே ஜிமெயில் மூலம் இயங்குவதால் கூகுள் குரோமின் பாதுகாப்பு அம்சம் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தற்போது கூகுள் குரோமில் கைரேகை சென்சார் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

பல இயங்கு தளங்களில் ஒரே ஜிமெயில் மூலம் இயங்குவதால் கூகுள் குரோமின் பாதுகாப்பு அம்சம் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தற்போது கூகுள் குரோமில் கைரேகை சென்சார் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் வெப் புரவுஸர் செயலியான கூகுள் குரோம் 2008 முதல் 10 வருடங்களாக செயல்பட்டு வருகின்றது. ஆண்டிராய்டு, iOS மற்றும் விண்டோஸ் போன்ற இயங்கு தளங்களில் ஒரு நாளைக்கு மட்டும் 1 பில்லியன் பயனாளர்கள் உபயோகித்து வருகின்றனர். கூகுள் குரோமின் சிறப்பம்சமே ஒரு பயனாளர் எளிதில் எங்கு வேண்டுமானாலும் எந்த தளத்திலும் அதனை ஒரே ஜிமெயில் மூலம் உபயோகப்படுத்தலாம்.

இந்த அம்சம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. ஆண்டிராய்டு, iOS மற்றும் விண்டோஸ் போன்ற தளங்களில் ஒரே ஐடியில் செயல்படும் வகையில் இருப்பதால் இதன் பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் பலப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது கூகுள் குரோமில் கைரேகை சென்சாரை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் ஒருவர் கூகுள் குரோமை மற்றவர்கள் அனுமதி இல்லாமல் உபயோகிக்காத படி பாதுகாத்து கொள்ளலாம். முன்னதாக குரோமின் லேட்டஸ்ட் வர்சனில் புளுடூத் விண்டோஸ் தலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் பிறகு தற்போது கைரேகை சென்சாரை வழங்கியுள்ளது. இந்த அம்சம் ஆண்டிராய்டு மற்றும் iOS தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர கூகுள் நிறுவனம், முகம் கண்டறிதல் (Face Detection), பார்கோட் (barcode), புகைப்படங்களில் வார்த்தைகளை கண்டறிதல் (Text Recognition System) போன்ற அப்டேட்களை வழங்கியுள்ளது. மேலும் கூகுள் குரோமில் அங்கீகார பக்கம் (authentication prompts), பணப்பரிவர்த்தனை வேலைகள் போன்றவற்றுக்காக தனியாக கூகுள் குரோம் திறக்கப்படும். இந்த பக்கங்கள் இனி தாமாகவே வேலை முடிந்தவுடன் மூடப்படும். 

கூகுள் குரோமில் அறிமுகப்படுத்தப்பட்ட கைரேகை சென்சார்